வலங்கைமான் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி !

1 minute read
வலங்கைமான் அருகே கீற்று கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக பலியானார். 


தொழிலாளி திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த கோவிந்தகுடியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது50).

தொழிலாளி. 

இவர் நேற்று அதே பகுதியை சேர்ந்த சவுந்தரபாண்டியன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் இருந்த மோட்டார் பம்பு செட்டுக்கு கீற்று கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இவருடன் கோவிந்தகுடியை சேர்ந்த கருப்பையன் (58) என்பவரும் பணியில் இருந்தார். பணியின்போது கருப்பையன் தென்னங்கீற்றுகளை எடுக்க சென்று இருந்தார்.

அந்த நேரத்தில் கொட்டகை அமைத்து கொண்டிருந்த சுப்பிரமணியன் பம்பு செட்டுடன் இணைக்கப்பட்டிருந்த எர்த் கம்பியை கழற்றி வைக்க முயற்சித்ததாக தெரிகிறது. 

இதில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அலறல் சத்தம் கேட்டு கருப்பையன் ஓடி வந்து பார்த்தபோது சுப்பிரமணியன் மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது. 

இதுகுறித்து அவர் தெரிவித்த தகவலின்பேரில் தென்னந்தோப்பின் உரிமையாளர் மற்றும் சுப்பிரமணியனின் உறவினர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து மின்சாரத்தை தடை செய்தனர். பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

இதையடுத்து வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வலங்கைமான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுபற்றி சுப்பிரமணியனின் மனைவி ராணி அளித்த புகாரின்பேரில் வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:
Today | 7, April 2025
Privacy and cookie settings