தஸ்லிமாவின் விசா முடிகிறது.. இந்தியாவில் நீட்டிக்கப்படுமா?

நாடுகடத்தப்பட்ட வங்காளதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதால் கடந்த இருபது ஆண்டுகளாக அமெரிக்கா, நார்வே, ஜெர்மனி, சுவீடன், இந்தியா என வெவ்வேறு நாடுகளில் இடம்மாறி வசித்து வருகிறார்.
 
இந்தியா அவருக்கு 2004ம் ஆண்டு முதல் தொடர்ச்சியான அடிப்படையில் விசா வழங்கி வருகிறது.

அந்த வகையில், அவர் ஒரு வருடம் இந்தியாவில் தங்குவதற்காக கடந்த ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. 52 வயதாகும் அவர் தற்போது டெல்லியில் தங்கியிருக்கிறார்.

இந்நிலையில், அவர் இந்தியாவில் தங்குவதற்கான அனுமதி இன்றுடன் முடிவடைகிறது. விசா காலத்தை நீட்டிப்பது தொடர்பான அவரது மனு மீது மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை. எனினும், விசா நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனுமதியை நீட்டிப்பது தொடர்பாக சில பாதுகாப்பு அமைப்புகளின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அனுமதிக்காலம் முடிவடைந்தபோதும் நீட்டிக்கப்படாதது இதுவே முதல் முறை என்றும், கடந்த 11 ஆண்டுகளில் இதுபோன்று நடந்தது இல்லை என்றும் தஸ்லிமா தெரிவித்தார்.

இதனால் கவலை அடைந்திருப்பதாக கூறிய தஸ்லிமா, வங்காளதேசத்திற்கு வெளியில் எனது இரண்டாவது தாய்நாடாக கருதும் இந்தியாவில் தங்கியிருக்க முடியாதா? என்றும் கேள்வி எழுப்பினார்.
நீண்டகால விசா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்திக்கும் முயற்சியிலும் தஸ்லிமா ஈடுபட்டுள்ளார்.
Tags:
Privacy and cookie settings