வாலு படத்தின் மீதுள்ள வழக்குகள் அனைத்தும் தீர்ந்த நிலையில் படம் விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்,
இந்நிலையில் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வாலு படத்தை வெளியிட முடியாமல் சிலர் தடுத்து என்னை கீழிறக்க முயற்சிக்கின்றனர்.
ஆனால் என்மீது உண்மையான அன்பு வைத்திருக்கும் ரசிகர்கள் இருக்கும் வரை உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது, எனக்கும் கடவுளிற்கும் நீங்கள் ஒருநாள் பதில் சொல்லியே தீர வேண்டும் என்று நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் மறைமுகமாக யாரையோ சாடியிருந்தார்.