சிலை கடத்தலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை... இயக்குனர் !

கோவில் சிலைகள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல திரைப்பட இயக்குனர் வீ.சேகரை புழல் சிறையில் இயக்குனர்கள் விக்ரமன், ஆர்.கே.செல்வமணி ஆகியோர் சந்தித்தனர்.
சிலை கடத்தலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை... இயக்குனர் !
அவர்களிடம் வீ.சேகர், இந்த குற்றத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. நான் யாரிடமும் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கவில்லை என்று கண்ணீர் மல்க கூறினார். 

தமிழ் திரையுலக சங்கங்கள் சார்பில் தமிழக காவல் துறைக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: 

தமிழ்த் திரையுலக தயாரிப்பாளர், கதாசிரியர் மற்றும் இயக்குநரான வீ.சேகர் ஒரு நல்ல பண்புள்ள மனிதர். வாழ்வியல் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை தன் திரைப்படங்களின் மூலம் மக்களுக்குச் சொன்னவர்.

அதன்மூலம் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். இப்படிப்பட்ட நல்ல மனிதர் மீது திடீரென்று சிலை கடத்தலில் ஈடுபட்டதாக ஒரு பழி விழுந்திருக்கிறது.

இதை கேட்டவர்களும், படித்தவர்களும் நம்ப மறுக்கிறார்கள். குற்றம் சாட்டப் பட்ட ஒருவர் சொன்ன ஆதாரமற்ற தகவலை நம்பி அவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறீர்கள்.
இது திரையுலகைச் சார்ந்த எங்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியையும், வேத னையையும் தந்துள்ளது. மேலும், அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக நாளிதழ்களில் செய்தி வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

ஆனால், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் விக்ரமனும், பொதுச் செயலாளர் ஆர்.கே. செல்வமணியும் 

புழல் சிறைக்குச் சென்று வீ.சேகரை சந்தித்த போது, இந்தக் குற்றத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று கண்ணீர் மல்க கூறியிருக்கிறார்.

மேலும் தான் எந்த ஒப்புதல் வாக்கு மூலத்தையும், எழுத்து மூலமாகவோ, வாய் மூலமாகவோ யாரிடமும் அளிக்க வில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் தயவு செய்து உண்மையை கண்டுபிடிக்கும் படி தமிழ்த் திரைப்படத் துறையை சார்ந்த தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம்,
தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பாக ஸ்காட்லா ணட் காவல் துறைக்கு இணையான நமது மதிப்புமிகு தமிழக காவல் துறை யை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings