இந்தியாவில் ஆண்டுதோறும் 45 ஆயிரம் குழந்தைகள் காணா மல் போகின்றனர் என்றும் இதில் தமிழகத்தில் மட்டும் 11 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போகின்றனர்
என்றும் தேசியக் குற்றப் பதிவு ஆணையச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் மேற்கு வங்கமும், அடுத்த இடத்தில் தமிழகமும் இருக்கிறது.
இப்படி குழந்தைகள் தொலைந்தால் www.trackthemissingchild.gov.in இணையத் தளத்தில் மட்டுமே காண முடியும்.
அதுவும் காவல் துறையினர் மட்டுமே தொலைந்த குழந்தைகளின் புகைப் படங்களையும் பதிவேற்ற முடியும்.
இந்நிலையில் தொலைந்த குழந்தையை கண்டு பிடிக்க மத்திய அரசின் சார்பில் www.khoyapaya.gov.in என்ற முகவரியில் புதிய வலைத் தளம் தொடங்கப் பட்டுள்ளது.
இந்த புதிய இணையத் தளத்தை பொதுமக்கள் நேரடியாக பயன்படுத்தி தொலைந்த குழந்தை குறித்த விவரங்களையும், புகைப் படத்தையும் பதிவேற்றலாம்.
இதன் மூலம் குழந்தையை கண்டுபிடிக்க முடியும் என்று நம்பப் படுகிறது.