நோய்களை முன்பே அறிய உதவும் ஸ்மார்ட் கண்ணாடி !

சர் ஐசக் நியூட்டன் சூரிய ஒளியை முப்பட்டைக் கண்ணாடி வழியாகச் செலுத் தி வயலட், இண்டிகோ, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு வண்ணங்க ளைப் பிரித்து தனித் தனி வண்ணங்களாக ஒளிவிட்டு பிரகாசிப்பதை உலகு க்குக் காட்டினார்.


நமது சித்தர்களும், மகான்களும் பாதரசத்தை மணியாகக் கட்டி ரசமணியாக தயாரித்து பல விதமான நோய்களைத் தீர்ப்பதற்கும் பல சித்துக்களை அடை வதற்கும் உபயோகித்து வந்ததாக ரசவாத நூல்கள் கூறுகின்றன.

மேலும் நமது சரீரத்தில் நோய்கள் ஏற்படும் போது முப்பட்டைக் கண்ணாடி யில் நமது உருவத்தை புகைப்படத்தில் பார்த்தால் ஒரு வண்ணம் மங்கலாக இருப்பது தெரியவரும்.

ஆகவே வண்ணப் பற்றாக் குறையே உடலில் நோய்களை வெளிப்படுத்திக் காட்டுகிறது. இந்நிலையில் நமது உடல்நிலை மற்றும் நோய்களை முன்பே அறிந்து கொள்ளும் வகையில் விரைவில் ஸ்மார்ட் முகம் பார்க்கும் கண்ணாடி வெளியாக உள்ளது.


வைஸ் கண்ணாடி என்ற நிறுவனம் ஸ்மார்ட் முகம் பார்க்கும் கண்ணாடி களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

நமது முகம் மற்றும் மூச்சு காற்று ஆகிய வற்றை நவீன சென்சார்கள் மூலம் ஆய்வு செய்வதன் மூலம் உடல் நிலை பற்றி தெரிந்துக் கொள்ள முடியும்.

இந்த புதிய தொழில் நுட்பம் மூலம் நீரிழிவு, மாரடைப்பு மற்றும் பிற இதய நோய்களை முன் கூட்டியே தெரிந்துக் கொள்ள முடியும்.
Tags:
Privacy and cookie settings