கல்விக்கடன் மாணவர்களின் உரிமை - ஒரு விளக்கம் !

மத்திய அரசின் கல்விக்கடன் திட்டம்.

திட்டத்தின் நோக்கம் : 

பொருளாதார நிலையில் பின் தங்கி யுள்ளவர்கள் என்ற காரணத்திற் காக, எந்த ஒரு மாணவனுக்கும் அல்லது மாணவிக்கும் உயர் கல்வி மறுக்கப்படக் கூடாது.

 

அவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட் டதே இத்திட்டம். 

 வங்கிகளின் பங்கு ( ROLE ) : எந்த ஒரு திட்டமாக இருந்தா லும் அதை அரசு நேரடியாக மேற்கொள்ள முடியாது.

எனவே இத்திட்டம் அரசு வங்கிகளின் மூலம் செயல் படுத்தப்படுகிறது. 

இத்திட்டத்தை பொறுத்த வரையில் வங்கிகள் தாமாக நிபந்தனைகளை விதிக்கவோ அல்லது தன் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப செயல்படவோ முடியாது.


மொத்தத்தில் கல்விக்கடனை பொறுத்த வரையில், அதை செயல்படுத்து ம் வெறும் ஏஜெண்ட் தான் அரசு வங்கிகள். கடன் உதவி பெற தேவையான தகுதிகள் :

1.தகுதி:

மாணவர் அல்லது மாணவி இந்திய பிரஜையாக இருக்க வேண்டும்.

2. படிப்பு:

தொழில் படிப்பு ( PROFESSIONAL COURSE) அல்லது தொழில் நுட்ப படிப்பி ல் ( TECHNICAL COURSE) நூளைவுத்தேர்வு மூலமாக சேர்ந்திருக்க வேண் டும். 

இது வெளிநாடு மற்றும் இந்தியாவில் கல்வி பயிலும் மாணவர்களு க்கு பொதுவானவை.

3. தொகை:

இந்தியாவில் கல்வி கற்க 10 லட்சம் ரூபாயும், மெரிட் உள்ளவர்கள் மற்றும் அத்தியாவசிய தேவை உள்ளவர் களுக்கு அதிகபட்சமாக 15 லடசம் ரூபாயும், 

வெளிநாட்டில் பயிலும் மாணவர்களுக்கு 20 லடசம் ரூபாயும், 25 லட்சம் ரூபாயும் வழங்கப்படும். 

4. எதற்கு:

கல்விக்கட்டணம் , தங்கும் விடுதி கட்டணம், தேர்வு கட்டணம், புத்தக ங்கள், கருவிகள், கணனி 

ஆகிய வற்றிற்கு தேவைப்படும் தொகையை மட்டுமே கடனாக பெற இயலும். 

வெளி நாட்டில் படிப்பவர்கள் இத்துடன் பயண கட்டணத்தையும் செர்த்துக் கொள்ளலாம். 


5. முன் செலுத்த வேண்டிய தொகை ( MARGIN): 

4 லட்சம் வரையான தொகைக்கு எதுவும் செலுத்த வேண்டியது இல்லை. 

அதற்கு மேற்பட்ட தொகைக்கு இந்தியாவில் கல்வி பயிலுபவர்கள் 5% , வெளிநாட்டில் பயிலுபவர்கள் 15% செலுத்த வேண்டும்.

6. செக்யூரிட்டி ( SECURITY ) : 

4 லட்சம் வரையிலான தொகைக்கு மாண்வருடன் சேர்ந்து பெற்றோரும் கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

(COOBLIGATION). 

4 லட்சத்திற்கு மேல் 7.5 லட்சம் வரை பெற்றோருடன் பொருத்தமான மூன்றாம் நபர் ஜாமின் தேவை. 

7.5 லட்சத்திற்கு மேல் கடன் தொகைக்கு தகுந்தவாறு சொத்து ஜாமின் தேவை.

7. கடனை திருப்பி அளிக்கவேண்டிய காலம் ( REPAYMENT PERIOD): 

படிப்பு காலம் ( COURSE PERIOD) முடிந்ததி லிருந்து ஒருவருடம் , அல்லது வேலை பார்க்க ஆரம்பித்ததி லிருந்து ஆறு மாதம். இதில் எது முன்பாக வருகிறதோ அதன்படி.

8. குடும்ப வருமானம் : 

இவ்வளவு வருமானம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை எதுவும் இல்லை.

9. விண்ணப்பித்தல்:

மாணவர் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள வங்கி கிளையில் விண்ணப்பிக்க வேண்டும்.


10. கடனுதவி பெற அங்கிகரிக்கப்பட்ட படிப்புகள் : 

இந்தியாவில் - டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, மற்றும் மின்னனு துறையால் அங்கீகரிக்கப்பட்ட கணனி படிப்புகள்.

வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு - Course of study abroad : Job-oriented professional/technical courses offered by reputed universities, MCA,MBA, MS etc.Courses conducted by CIMA - London, CPA in USA etc

11. வயது வரம்பு : 

இந்தியாவில் பயிலும் மாணவர் களுக்கு 15 - 30 வயது. வெளிநாட்டில் பயிலும் மாணவர் களுக்கு 18 - 35 வயது. 

இவை தான் கல்விக்கடன் பெற தேவையான தகவல்கள்.

இதில் குறிப்பிடப்பட்டு உள்ள அனைத்து நிபந்தனைகளும் எல்லா வங்கிகளு க்கும் பொதுவான ஒன்று.


முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு, தேவையான ஆவணங்களுடன் விண்ணப் பிக்கப்பட்ட விண்ணப்ப படிவங்களை பரிசீலித்து முடிவெடுக்க வங்கிகளுக்கு அனுமதிக்கப் பட்டுள்ள

காலக்கெடு - 15 நாட்களி லிருந்து 30 நாட்கள் .
Tags:
Privacy and cookie settings