விஜய் பட திரையரங்குமுன் கத்தியுடன் அலைந்த பாபி சிம்ஹா!

விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ள ஒரு திரையரங்குமுன் வளர்முக நாயகன் பாபி சிம்ஹா கத்தியுடன் அலைவது போன்ற படம் அருகில் வெளியிடப்பட்டுள்ளது.

இது பாபி சிம்ஹா நடிக்கும் ‘மசாலா படம்’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்று ள்ள ஒரு காட்சி! சமீபகாலமாக திரையுலகம் சந்தித்துவரும் மிகப் பெரிய சவா ல் சமூக வலைதள விமர்சகர்களிடம் இருந்து தான் என்பது பொதுவான கருத்து.

படத்தை பற்றி விமர்சனம் செய்வது காசு கொடுத்து படம் பார்ப்பவரின் உரிமை என்று ஒரு சாராரும், சினிமா என்பது ஒரு வியாபாரம், அடுத்தவரின் வியாபார த்தை விமரிசித்து வீழ்த்த இவர்கள் யார் என்று மற்றொரு சாராரும் வாத பிரதிவாதங்களை வைத்து தர்க்கம் செய்து வருகிறார்கள்.

ஆல் இன் பிக்சர்ஸ் என்னும் புதிய பட நிறுவனம் தயாரிப்பில, ‘வெண்ணிலா கபடி குழு’ , ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளரான லக்ஷ்மன் குமார் இயக்குனராக அறிமுகமாகும் ‘ மசாலா படம்’ இந்தக் கருத்தை மையமாக வைத்து தான் படமாக்கப்படுகிறது.

‘மசாலா படம்’ குறித்து இயக்குனர் லக்ஷ்மன் குமார் கூறுகையில், “என்னுடைய முதல் படம் சராசரியான ஒரு கதையாக இருக்கக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தேன்.

அதற்கு ஏற்ற கதையைப் பற்றி யோசிக்கும்போது எனக்குத் தோன்றியது தான் இந்தக் கதை. எல்லோரும் விமரிசகர்கள் தான் என்ற நிலையில் தான் இன்றைய சினிமா உள்ளது.

யார் செய்வது சரி? விமர்சனம் என்பது உரிமையா? அல்லது அடுத்தவரின் வியாபாரத்தை கெடுக்கும் முயற்சியா? விமர்சனத்துக்கு எல்லைக் கோடு உண்டா? என்ற பல கேள்விகளுக்கு ‘மசாலா படம்’தான் சிறந்த பதில்.

 “கதையைப் பற்றி விவாதித்த உடனே படத்தை தயாரிக்க முன்வந்த எனது நண்பரும் தயாரிப்பாளருமான விஜய் ராகவேந்தராவுக்கு என் நன்றி.

நாயகர்கள் பாபி சிம்ஹாவுக்கும் , மிர்ச்சி சிவாவுக்கும் இந்தப் படம் அவர்களது பயணத்தில் முக்கிய படமாகும். கதாநாயகியாக லக்ஷ்மி நடித்து உள்ளார்.

இசைய்மைப்பு கார்த்திக் ஆச்சாரியா. “இது போன்ற படங்களுக்கு பெரிய ஊக்கமே படத்தை முறையாக பெரிய அளவில் விளம்பரம் செய்து வெளியிடும் விநியோகஸ்தர் தான்.

அந்த முறையில் சமீபத்தில் வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற ஆங்கிலப் படங்களான ‘டெர்மினேட்டர்’, ‘மிஷின் இம்பாசிபிள்’’ ஆகிய படங்களை தென்னகமெங்கும் விநியோகம் செய்த அவ்ரா சினிமாஸ் மகேஷ், எங்களது ‘மசாலா படம்’ அக்டோபர் 2ஆம் தேதி வெளிவர சீரிய முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார்.

‘மசாலா படம்’ ரசிகர்களுக்கு மட்டுமல்ல, விமர்சகர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும”‘ என நம்பிக்கையுடன் தெரிவித்தார் லக்ஷ்மன் குமார்.
Tags:
Privacy and cookie settings