கட்டுமான நிறுவனங்களுக்குக் கிடுக்கிப்பிடி !

ஒப்பந்த விதிகளை மீறும் கட்டுமான நிறுவனங்களின் அதிபர்களுக்கு சிறை தண்டனை விதிப்பது போன்ற கடுமையான அம்சங்களை ரியல் எஸ்டேட் முறைப்படுத்தும் மசோதாவில் இடம்பெறச் செய்ய நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைக்கும் எனத் தெரிகிறது.
 Real Estate
வருகிற 21ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் இந்த மசோதா மீதான நிலைக் குழுவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.

விதிகளை மீறும் கட்டுமான நிறுவனங்களின் அதிபர்களுக்கு அபராதம் விதித்தால், அதற்கான தொகையையும் வாடிக்கையாளர்கள் மீது கட்டுமான நிறுவனங்கள் சுமத்த வாய்ப்புள்ளதாக நிலைக் குழு உறுப்பினர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, ஒப்பந்தத்தை மீறுபவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டால் தவறுகள் குறையும் என நிலைக் குழு பரிந்துரைக்க உள்ளதாகவும் அதன் 21 உறுப்பினர்களில் ஒருவரான ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings