புகார் கூறியவரின் செல்போன் எண்ணையே குற்றவாளிக்கு சென்னை காவல்துறையினரே கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.
முன்னாள் குயடிரசுத் தலைவர் அப்துல்கலாம் மறைவையொட்டி நேற்று முன்தினம் தமிழகத்தில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டதோடு, டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், அதே நாளில் சென்னை முகப்பேர் கோல்டன் ஜார்ஜ் நகரில், புதுபாலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் பார் திறந்திருந்தது.
இது பற்றி அதே பகுதியை சேர்ந்த துரை என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டறைக்கு தனது செல்போனில் புகார் அளித்துள்ளார். துரை புகார் அளித்த சிறிது நேரத்தில் அவரது செல்போன் எண்ணுக்கு போன் ஒன்று வந்துள்ளது.
அதில் பேசிய நபர் போதையில் இருந்ததோடு, அசிங்கமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். பின்னர், துரைக்கு மீண்டும் செல்போனில் பேசி ஒருவர், நான் செந்தில் போலீஸ் கான்ஸ்டபிள் பேசுகிறேன்.
உனக்கு என்னதான் பிரச்னை என்று கேட்டுள்ளார். நீங்க எங்க இருக்கீங்கன்னு கேட்டுள்ளார். அதற்கு நீங்க எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார் துரை.
நான் ஒயின் ஷாப் பக்கத்துல இருக்கேன் நீ வா என்று கூறியதோடு போன் தொடர்பு துண்டித்துள்ளார். அதன் பிறகு துரைக்கு இன்னொரு எண்ணிலிருந்து போன் வந்துள்ளது.
அதில் பேசிய நபர், தனது பெயர் செந்தில் போலீஸ்காரர் என கூறியுள்ளார். இதற்கு முன்பு பேசியவரும் இதே பெயரைதான் சொன்னாரே என துரை கேட்டுள்ளார்.
உடனே போனை அவர் வைத்து விட்டார். ஆனால் சிறிது நேரத்தில் முதலில் பேசிய போதை ஆசாமி மீண்டும் தொடர்பில் வந்து தாறுமாறாக திட்டி உன்னை இரவுக்குள் தீர்த்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
தொடர்ந்து தனது செல்போனுக்கு அழைப்பு வந்ததால் அதிர்ச்சியடைந்த துரை, மீண்டும் காவல்துறை கட்டுப்பாட்டறைக்கு போன் செய்து, நான் புகார் அளித்த நம்பரை எப்படி சம்பந்தப்பட்ட பார் உரிமையாளரிடமே வழங்கலாம்.
இது பற்றி நான் கமிஷனரிடம் புகார் அளிக்க வேண்டும் என்று போனை எடுத்த பெண் போலீசிடம் அவர் கேட்கிறார். ஆனால் அந்த பெண் போலீஸ் அப்படி தர முடியாது மெயில் பண்ணுங்கள் என்கிறார்.
அவர்கள் என்னை இரவுக்குள் தீர்த்து விடுவேன்னு மிரட்டுறாங்க நீங்க மெயில் பண்ணுங்கண்னு சொல்றீங்களேன்னு கேட்கிறார். இப்படி அந்த வாட்ஸ் அப் உரையாடல் நடக்கிறது.
"ஒரு இடத்தில் குற்றச்சம்பவம் நடப்பதை போலீசாரிடம் கூறும் புகார்தாரர்கள் எண்ணையே குற்றவாளிகளிடம் அளித்தால் குற்றச்சம்பவங்களை பற்றி பொதுமக்கள் எப்படி துணிந்து புகார் அளிப்பார்கள்" என கேள்வி எழுப்பியுள்ளார் துரை.