சென்னையில் கர்ப்பிணி போல நடித்து கடைகளில் நூதனமான முறையில் கொள்ளை அடிக்கும் பெண்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை புரசை வாக்கத்தில் பிரபல துணிக்கடையில் நேற்று முன்தினம் 2 பெண்கள் துணி எடுப்பதற்காக வந்தனர்.
சேலை எடுக்க கடைக்கு வரும்போது சாதாரணமாக வந்த அந்த பெண்கள் கடையை விட்டு வெளியேறும்போது வயிறு பெரிதான நிலையில் கர்ப்பிணி பெண்கள் போல சென்றனர்.
இதை கடை ஊழியர்கள் கண்டுபிடித்து விட்டனர். உடனடியாக அந்த பெண்க ளை பிடித்து சோதனை போட்டனர். நாங்கள் கர்ப்பிணிகள், எங்களை சோத னை போட்டு அவமானப்படுத்துவதா என்று அந்த பெண்கள் கலாட்டாவில் ஈடுபட்டனர்.
இதையும் மீறி அந்த பெண்களிடம் கடை ஊழியர்கள் சோதனை போட்டபோது, அவர்கள் அடி வயிற்றில் சேலைகளை சுற்றி மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
அந்த பெண்கள் இருவரோடு, ஆண் ஒருவரையும் பிடித்து கீழ்ப்பாக்கம் போலீசில் துணிக்கடை ஊழியர்கள் ஒப்படைத்தனர்.
கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்க ளிடம் விசாரணை நடத்தினார். இன்ஸ்பெக்டரிடமும் அந்த பெண்கள் அழுது புரண்டு நாடகமாடினார்கள்.
நாங்கள் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், சேலைகள் கீழே விழுந்து கிடந்தது, அதை நாங்கள் எடுத்துக்கொடுத்தோம், அதை தவறாக புரிந்து கொண்டு எங்களுக்கு திருட்டு பட்டம் கட்டிவிட்டனர் என்று அந்த பெண்கள் தெரிவித்தனர்.
மேலும் அந்த பெண்களை விடுவிக்கும்படி சிபாரிசு வந்தது. இதனால் அவர்க ளை கைது செய்யாமல் போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையில், குறிப்பிட்ட துணிக்கடையில் உள்ள கேமராவை ஆய்வு செய் தபோது அதில் குறிப்பிட்ட அந்த பெண்கள் சேலைகளை திருடி அடி வயிற்றில் மறைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதை ஆதாரமாக வைத்து அந்த பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அந்த பெண்கள் இருவரும் கர்ப்பிணி போல நாடகமாடி நகைகடையில் நகை திருடுவதையும், துணிக்கடையில் சேலைகள் திருடுவதையும் தொழி லாக செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் இருவரும் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்தவர்கள். அவ ர்களில் ஒருவர் பெயர் செல்வி என்ற அழகுராணி. இன்னொருவர் பெயர் முத் துபாண்டியம்மாள். அவர்களுடன் பிடிபட்ட ஆணின் பெயர் பூம்பதுரை. இவர் களிடம் இருந்து 5 பட்டுப்புடவைகள் மீட்கப்பட்டன.
இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்ப ப்பட்டதாக போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்தனர்.
அவர்கள் இருவரும் பட்டுச்சேலை பிரிவில் சேலை எடுப்பது போல நடித்தனர். பின்னர் சேலை எதுவும் எடுக்காமல் கடையை விட்டு வெளியேறினார்கள்.
சேலை எடுக்க கடைக்கு வரும்போது சாதாரணமாக வந்த அந்த பெண்கள் கடையை விட்டு வெளியேறும்போது வயிறு பெரிதான நிலையில் கர்ப்பிணி பெண்கள் போல சென்றனர்.
இதை கடை ஊழியர்கள் கண்டுபிடித்து விட்டனர். உடனடியாக அந்த பெண்க ளை பிடித்து சோதனை போட்டனர். நாங்கள் கர்ப்பிணிகள், எங்களை சோத னை போட்டு அவமானப்படுத்துவதா என்று அந்த பெண்கள் கலாட்டாவில் ஈடுபட்டனர்.
இதையும் மீறி அந்த பெண்களிடம் கடை ஊழியர்கள் சோதனை போட்டபோது, அவர்கள் அடி வயிற்றில் சேலைகளை சுற்றி மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
அந்த பெண்கள் இருவரோடு, ஆண் ஒருவரையும் பிடித்து கீழ்ப்பாக்கம் போலீசில் துணிக்கடை ஊழியர்கள் ஒப்படைத்தனர்.
கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்க ளிடம் விசாரணை நடத்தினார். இன்ஸ்பெக்டரிடமும் அந்த பெண்கள் அழுது புரண்டு நாடகமாடினார்கள்.
நாங்கள் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், சேலைகள் கீழே விழுந்து கிடந்தது, அதை நாங்கள் எடுத்துக்கொடுத்தோம், அதை தவறாக புரிந்து கொண்டு எங்களுக்கு திருட்டு பட்டம் கட்டிவிட்டனர் என்று அந்த பெண்கள் தெரிவித்தனர்.
மேலும் அந்த பெண்களை விடுவிக்கும்படி சிபாரிசு வந்தது. இதனால் அவர்க ளை கைது செய்யாமல் போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.