கலாமின் உடலை காண முடியாத பொதுமக்கள், அவரது நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
கலாமின் நினைவிடத்தில் நேற்று இரவு முதல் பொதுமக்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.
கலாமின் உடலை இறுதியாக பார்க்க முடியாதவர்கள், அவர் உடல் புதைக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து கொண்டிருக்கின்றனர்.
இதேபோல், ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாமின் இல்லம், அவர் படித்த துவக்கப் பள்ளி ஆகியவற்றையும் பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
மேலும், வெளி மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் வரும் யாத்ரீகர்கள், வரும் வழியில் உள்ள கலாமின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய பின்னர் ராமேஸ்வரம் செல்கின்றனர்.
இரவு நேரத்திலும் நினைவிடத்தை பொதுமக்கள் பார்வையிட வசதியாக மின் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது.
நினைவிடத்தை பார்வையிட்டு அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதியை தங்கச்சிமடம் ஊராட்சி செய்துள்ளது.
மேலும், கலாமின் நினைவிடத்தில் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
- இரா.மோகன்