இரண்டு பேர் பயணம் செய்யக்கூடிய தானியங்கி காரைத் தயாரித்துள்ளது கூகுள் நிறுவனம். பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் பயன்பாடு இல்லாமலும் ,பெடல் அல்லது ஸ்டீயரிங் வீல் இல்லாமலும் இக்காரை நாம் பயன்படுத்த முடியும்.
இக்காரின் மேற் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கருப்பு குமிழ் போன்ற அமைப்பு சென்சாராக பயப்படும்.இதன் மூலம் கூகுள் வரையறுத்துள்ள வழிகளில் டிரைவர் இல்லாமலேயே இந்த காரில் நாம் பயணிக்கலாம்.
மிக குறுகிய தூரத்திற்கு மட்டுமே பயணிக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள இக்காரில்,நீண்ட பயணத்துக்கு தேவையான ஏயர் பாக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இல்லை.
25 மைல்களுக்கு அப்பால் இதில் பயணிக்க வேண்டு மாயின், மீண்டும் சார்ச் செய்த பின்னரே இதில் பயணிக்க முடியும். தற்போது 25 கார்களை தயாரித் துள்ள கூகுள் நிறுவனம்,
இக்கார் களை வெற்றி கரமாக சோதனை செய்த பின்னர், மேலும், பல கார்களை தயாரிக்க முடிவெடு த்திருப்ப தாக தெரிவித் துள்ளது.