ஹார்டிஸ்க் டேட்டாவை சேர்த்து வைக்கும் இடமாகவும் ஆபெரடிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்யவும் தேவைப் படுகிறது .
ஹார்டிஸ்கில் உள்ள ப்லோட்டர்கள் 5400 rpm வேகக்தில் (தற்போது 7200 rpm வேகத்தில் சுற்றும் ஹார்டிஸ்குகள் கிடைகின்றன)
சுற்றும் போது டேட்டா (பழைய கிராம போன் முறைதான் ) பதியப் படுகிறது. டேட்டாவானது ஃபில்லிங் முறையில் நிரப்பப் படுகிறது .
அதி வேகத்தில் ஹார்டிஸ்க் சுற்றுவதால் ஒரு file ஒரே இடத்தில் பதிந்து வைக்க வாய்ப்பில்லை , அது சிறு பாக்கெட் களாக மாற்றப்பட்டு பல இடங்களிலில் ஃபில்லிங் இன்ஸ்டால் செயப் படுகிறது .
நாம் file திறக்கும் போது பல இடங்களில் உள்ள அதன் பாக்கெட்கள் ஒன்று சேர்க்கப்பட்டு பின் முழு வடிவம் பெற்று திரையில் file ஆக தோன்றுகிறது .
கணிணியில் file ஓபன் செய்ய அதிக நேரம் எடுக்கும் போது டிஸ்க் defragmentation மூலம் பல இடங்களில் சிறு சிறு பாக்கேட்களாக உள்ள file ஆனது சுருக்கப்பட்டு மாற்றப்படுகிறது .
மேலே உள்ள ஹார்டிஸ்க் செர்வரில் பயன் படகூடிய scsi வகையானதாகும்.
இதற்கென்று தனியாக scsi கார்டு மதர் போர்டில் இணைக்கப்பட்டு பயன் படும் . விலை சற்று கூடுதலானதால் அலுவலகங்களில் மட்டுமே பயன் பாட்டில் உள்ளது .
மேலே உள்ள ஹார்டிஸ்க் IDE வகையானதாகும் . பொதுவாக உபயோகத்தில் இருந்தாலும் தற்போது இதன் பயன் படு குறைந்து பொய் உள்ளது.
டெஸ்க்டாப் கணிணியில் அதிகம் பயன் படுத்தப் படுகிறது . பொதுவான பயன் பாட்டில் உள்ளது IDE ஹார்டிஸ்களை விட sata ஹார்டிஸ்கள் வேகமானவை .
டெஸ்க்டாப் கணிணியில் பயன்படுத்தப்படுபவை . sata முன்னமே வந்து விட்டாலும் அது வேகம் குறைவானதாக கருதப்பட்டு IDE வகை பயன் படுத்தப்பட்டன.
பின்னர் சிறிது மாறுதலுக்கு பிறகு sata வகை சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது. sata 1.5Gbits வரை டேட்டா transfer செய்ய கூடியவை .
அடுத்த கட்ட தொழில்நுட்ப முன்னேற்றமாக esata வகை ஹார்டிஸ்க்கள் வந்துள்ளன . இவை sata வகையை விட இருமடங்கு வேகமாக டேட்டா transfer செய்ய வசதியானவை .
ஹார்டிஸ்க் வாங்கும் போது வாரண்டி சரி பார்த்து வாங்க வேண்டும் .பொதுவாக ஹார்டிஸ்க் 3 வருட வாரேன்டி சில வகை 5 வருட வாரேன்டி உடனும் வருகின்றன.
சீகேட் மற்றும் வெஸ்டேர்ன் டிஜிட்டல் இரண்டும் அதிக பயன் பாட்டில் உள்ளவை .DVD, ப்லோப்பி மற்றும் pen டிரைவ் களை விட ஹார்டிஸ்க் டேட்டாவை அதிக காலம் வைத்திருக்க உதவுகிறது .
ஹர்டிச்க்களை கையாளும் போது மிகவும் கவன்முடன் கையாள வேண்டும். அதில் உள்ள ப்லோடேர்கள் சிறிது இடம் மாறினாலும் முழுவதும் வீணாகி விடும் .
அதே போல் அதிக சத்தம் ஹார்டிஸ்குகள் இருந்து வர ஆரம்பித்து விட்டால் உடன் உங்களது பேக்கப்களை எடுத்து கொள்ள வேண்டும்.
ஏனனில் எப்போது வேண்டுமானாலும் அந்த ஹார்டிஸ்க் தன்னுடைய இயக்கத்தை நிறுத்தி கொள்ளலாம் .
அதே போல் பவர் fluctuation இருந்தாலும் , அதிக பார்மட் செய்தாலும் ஹார்டிஸ்க் தன் மூச்சினை நிறுத்தி விடும் .
NTFS (நியூ டெக்னாலஜி file சிஸ்டம் ), FAT32 என இரு வகைகளில் பார்மட் செயப்பட்டு இருந்தாலும் தற்போது NTFS அதிகம் உபயோகப் படுத்தபடுகிறது.
பார்மட் அடிப்பதை பற்றி ஆபெரடிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்யும் வகுப்பின் போது விரிவாக பார்க்கலாம்.
நாம் வாங்க போகும் ஹார்டிஸ்க் சீகேட் 500 gb - 2700 rs.