இது எத்தனையாவது சுதந்திர தினம் என்று குழம்பிய அதிகாரிகள் !

இந்தியா சுதந்திரம் அடைந்து இந்த ஆண்டுடன் எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்றுக் கூட தெரியாமல் அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம் தான்.
 Thenkasi officials wrongly typed the circular for independence day
அரசுத்துறையில் கீழ்மட்ட அதிகாரிகள் தவறு செய்தால் அவர்களை உடனடியாக மெமோ கொடுத்து தண்டிப்பது உயர் அதிகாரிகளின் வழக்கம். 

ஆனால் ஒருநாடு எத்தனையோ தியாகங்களை சந்தித்து விடுதலைப் பெற்ற வரலாற்று முக்கியம் வாய்ந்த தினத்தின் ஆண்டுகள் கூடத்தெரியாமல் அரசின் உயர் பதவியில் இருக்கும் சிறப்பு வாய்ந்த அதிகாரிகளை என்ன செய்யவது.

ப்படித்தான் தென்காசி நகராட்சி அலுவலகத்திலிருந்து நகரமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரத் தின கடிதத்தின் இணைப்பில் அச்சடித்துள்ளனர்.

அவர்களது பணியின் வேகமும்,திறமையும் இந்தக் கடிதத்திலேயே தெரியும். அக்கடிதத்தில் 68வது சுதந்திர தின இந்த ஆணையாளரை என்ன செய்ய முடியும் சொல்லுங்கள். 

ஒரு உதவியாளர் நாட்டின் சுதந்திரத்தின விழா கடித நகலை தட்டச்சு செய்து உயர் அதிகாரியான ஆணையாளர் அனுமதி பெற்று அதை அதிகாரிகள் சரிபார்த்த பின்பு தான் வெளியிடுவது அரசின் மரபு மட்டுமல்ல.

சாதாரண மனிதனின் அன்றாட மரபும் கூட. ஆனால் ஒரு ஆணையாளர் இந்த கடிதத்தை பார்க்காமல் எப்படி ஒப்புதல் வழங்கினார் என்பது தான் புரியாத புதிராக இருப்பதாக தென்காசி நகரமன்ற உறுப்பினர்கள் புலம்புகின்றனர்.
Tags:
Privacy and cookie settings