சான்றிதழ்களை லேமினேட் செய்ய வேண்டாமென அறிவுறுத்தல்

மதிப்பெண் சான்றிதழை லேமினேட் செய்ய வேண்டாம் என, தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன், மாணவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
அவரது அறிக்கை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் லேமினேட் செய்வதாக தகவல் வருகிறது. 

சான்றிதழை லேமினேட் செய்தால் அது பழுதாகும். மதிப்பெண் சான்றிதழில் பெயர் திருத்தம்,


பிறந்த தேதியில் திருத்தம் என தெரிய வரும்போது சான்றிதழில் திருத்தம் செய்வது கடினம்.

மாணவர்கள் வெளிநாடு செல்ல முயன்றால், அவர்களின் சான்றிதழ் பின் பக்கத்தில் அரசு முத்திரை இட வேண்டும்.

இதற்காக லேமினேட்டை பிரிக்கும்போது சான்றிதழ் சேதமாகும்.

எனவே சான்றிதழ்களை லேமினேட் செய்ய வேண்டாம் என மாணவர்களை தேர்வுத் துறை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
Tags:
Privacy and cookie settings