கலாம் சராசரி விஞ்ஞானி.. பாகிஸ்தான் விஞ்ஞானி ஆணவப் பேட்டி!

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், பாரத ரத்னா ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் மறைவினால் இந்தியா நாடே துயரத்தில் ஆழ்ந்துள்ளது.
 
மறைந்த அந்த மாமேதைக்கு நாடே கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது. அப்துல்கலாம் உடல் தற்போது அவரது சொந்த ஊரான ராமேசுவரம் கொண்டு செல்லபட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

உலகமே வியந்து போற்றும் இந்திய விஞ்ஞானியான அப்துல்கலாம் குறித்து பாகிஸ்தானை சேர்ந்த அணு விஞ்ஞானி அப்துல் காதீர் கான் பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில், '' அப்துல்கலாம் ஒரு சராசரி விஞ்ஞானிதான் .

அப்துல் கலாமின் பங்களிப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் அதிக அளவில் இருந்ததாக எனக்கு நினைவில் இல்லை. அப்துல் கலாமும், இந்திய அரசும் தங்கள் ஏவுகணை திட்டத்திற்கு ரஷ்ய தொழில் நுட்பத்தையே அதிகம் பயன்படுத்தின.

 பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, கடந்த 2002 ஆம் ஆண்டு முஸ்லீம் மற்றும் மதச்சார்பற்ற வாக்குகளை பெற அப்துல் கலாமை பயன்படுத்தி கொண்டன'' என்றார்.

அப்துல்கலாமை சராசரி விஞ்ஞானி என்ற அப்துல் காதீர் கான், பாகிஸ்தானின் உயர்மட்ட விஞ்ஞானியான இருந்தார்.
 
இவரது சந்தேகத்துக்கிடமான நடவடிக்கையால் அறிவியல் திட்டங்களில் இருந்து நீக்கப்பட்டார். பாகிஸ்தானின் அணு ஆயுத ரகசியங்களை பிற நாடுகளுக்கு விற்றதாகவும் இவர் மீது புகார் எழுந்தது. இந்தியனை பற்றி பாகிஸ்தானிக்கு என்ன தெரியும் .
Tags:
Privacy and cookie settings