ஆடுதுறை - ஆவணியாபுரத்தில் நடந்தது என்ன?

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவிலுள்ள பேரூராட்சி ஆடுதுறை. காயிதே மில்லத் அவர்களின் மனைவி ஜமால் ஹமீதா பீவி அவர்களின் ஊர் இது என்பதுகுறிப்பிடத்தக்கது.
சுமார் 11000 மக்கள் தொகை கொண்ட இந்த ஊரில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 3000இந்த ஊரில் 3 பள்ளிவாசல்கள் தனித் தனி ஜமாஅத்துகளாக அமைந்துள்ளன.

இதில் 450 வீடுகளை உள்ளடக்கிய பெரிய ஜமாஅத் முஹ்யித்தீன் ஆண்டவர் பள்ளிவாசல் (ஜாமிஆ மஸ்ஜித்) ஜமாஅத்தாகும் 100 வருடங்ளை தாண்டிய இப்பள்ளி தமிடிநநாடு வக்ஃப்வாரியத்தில் பதிவு செய்யப்பட்டதாகும்.

சுன்னத் வல்ஜமாஅத் கொள்கையில் செயல்படும் இப்பள்ளி ஹனபி முஹல்லாவாகும். ஆடுதுறையை ஒட்டியுள்ள ஊராட்சி ஆவணியாபுரம். சுமார் 8000 மக்கள் தொகை கொண்ட இந்த ஊராட்சியில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள்.

அதாவது சுமார் 4000பேர்.ஆவணியாபுரத்தில் சுன்னத் ஜமாஅத் பள்ளிகள் இரண்டு உள்ளன. இவை ஹனபி முஹல்லாவாகும். இரண்டு பள்ளிகள் இருந்தாலும் ஒரே மஹல்லா ஜமாஅத். இதற்குபாத்தியப்பட்ட கபரஸ்தானும் இங்கு உண்டு.

ஆவணியாபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை ஏற்படுத்தி சுமார் 6 ஆண்டுகளுக்கு முன் இங்கு ஒரு பள்ளியையும் உருவாக்கியுள்ளனர். தங்கள் கொள்கையுடையவர்களை அடக்கம் செய்வதற்காக தனிஇடமும் வாங்கியுள்ளனர்.

ஆடுதுறையில் டி.என்.டி.ஜே அமைப்பினர் விரல்விட்டு எண்ணும் ஒருசிலரே உள்ளதால் ஆவணியாபுரம் கிளையிலேயே அவர்கள் இணைந்துள்ளனர்.

ஆடுதுறையையும் ஆவணியாபுரத்தையும் பிரிப்பது சாத்தூர் வாய்க்கால் என்ற ஒரு வாய்க்கால் தான். ஆடுதுறை ஜாமிஆபள்ளிக்கு பாத்தியப்பட்ட கபரஸ்தான் அமைந்துள்ளது. ஆவணியாபுரத்தில்.ஆடுதுறை ஜாமிஆ பள்ளிக்கும் இந்த கபரஸ்தானுக்கும்இடைவெளி சுமார் 100 மீட்டர்களாகும்.

இந்த கபரஸ்தானில் அத்து மீறி நுழைந்து ஆயுதங்களால்தாக்குதல் நடத்தியதும் இதில் ஆடுதுறை ஜாமிஆமஸ்ஜித் நிர்வாகிகள் ஏ.எம். ஷாஜஹான் உள்ளிட்டோர் தாக்கப்பட்டு

இறையருளால் உயிர் தப்பிய சம்பவம் தமிழகமுஸ்லிம்களிடம் மட்டுமின்றி கடல் கடந்து வாழும் தமிழகமக்களிடமும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நடந்தது என்ன? இரண்டரை வருடங்களுக்கு முன் டி.என்.டி.ஜே அமைப்பை சேர்ந்த ஜகுபர் அலி என்பவரின் தந்தை ஹனீப்ரஹ்மான் இறந்துவிட அவரது ஜனாஸாவை அடக்கம் செய்ய

ஆடுதுறை ஜாமிஆ பள்ளியில் அனுமதி கேட்டு நிர்வாகமும் அனுமதி வழங்கிய நிலையில் பள்ளிவாசலுக்கு கொண்டு வராமல் நிர்வாகிகளுக்கு தெரியாமல் அடக்கம்செய்துள்ளனர்.

இதை அறிந்த ஜமாஅத்தினர், இதை அனுமதித்தால் யார் வேண்டுமானாலும் எப்படிப்பட்ட பிணத்தையும் கொண்டு வந்து புதைக்க வழி ஏற்படுத்திவிடும்இதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படலாம். எனவே இதனைதடைசெய்யவேண்டும்‘

எனகோரிக்கைவைக்க அதன்பேரில் ‘பள்ளிவாசல் நிர்வாக ஒப்புதல் இல்லாமல் பள்ளிவாசல் கபரஸ்தானில் யாரையும் அடக்கம் செய்யக்கூடாது என’ நிர்வாகிகள் அறிவித்தனர். அதன்படியே நடைபெற்றுவருகிறது.

கடந்த 27-7-2015 திங்கள் அன்று மேற்குறிப்பிட்ட ஜகுபர் அலியின் மனைவிக்கு குறைபிரசவம் ஏற்பட்டு குழந்தை இறந்து பிறந்தது. அதனை அடக்கம் செய்ய பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டனர். அனுமதியும் வழங்கப்பட்டது.

குழந்தைக்கு ஜனாஸா தொழுகை இல்லைஎன்பதால் எந்தப் பிரச்சனையும் எழவில்லை. அடக்கமும்முடிந்தது. ஆறுதல் கூறிய ஜமாஅத்தார்கள் அன்று மாலையே மேற்படி ஜகுபர் அலியின் மனைவி ரூபியத் மரணமடைந்துவிட்டார்.

செய்தியறிந்த ஏ.எம் ஷாஜஹான் உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் அவரது இல்லம் சென்று ஜகுபர் அலியை சந்தித்து ஆறுதல் கூறி மஃபிரத்துக்கு துஆ செய்து வந்தனர்.

இதன் பின்னர்தான் ஆவணியாபுரம் டி.என்.ஏ.ஜே அமைப்பை சேர்ந்த வருசைமுஹம்மது, இமாம் அலி, அப்துல் மாலிக் ஆகியோர் ஆடுதுறை ஜாமிஆபள்ளி நிர்வாகிகளை சந்தித்து அடக்கம் செய்ய அனுமதி கேட்டுள்ளனர். “தாராளமாக அடக்குங்கள்;

ஆனால் பள்ளி இமாமை வைத்து வழக்கம் போல் பள்ளியில் ஜனாஸா தொழுகை வேண்டும் என நிர்வாகிகள் கூறியதும் “நாங்கள் வீட்டிலேயே ஜனாஸா தொழுகை நடத்திவிட்டு வருவோம்“ என வந்தவர்கள் சொல்ல,

“நீங்கள் ஜனாஸா தொழுகை வீட்டில் நடத்தினாலும், ‘ஜமாஅத்தினருக்காக பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடத்த வேண்டும்‘ என நிர்வாகிகள் கூற நாங்கள் கேட்டுவிட்டு வந்து சொல்கிறோம்‘ என வந்தவர்கள் கூறி பின்னர் வந்து,

“இறையச்சம் இல்லாத பள்ளியில் நாங்கள் தொழுகை நடத்த விரும்பவில்லை; வீட்டிலேயே தொழுகை நடத்திவிட்டு கபரஸ்தானில் அடக்கம் செய்து விடுவோம்“ என கூறிச் சென்றனராம்.

பண்டாரவாடை உள்ளிட்ட ஊர்களில் பிரச்சனை ஏற்படுத்தியது போல் இங்கும் ஏற்படுத்திவிடுவார்கள் என கருதிய ஆடுதுறை ஜாமிஆ பள்ளி நிர்வாகத்தினர் காவல்துறைக்கும் வருவாய் துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

அதிகாரி முன்னிலையிலேயே அராஜகம் காலை 10 மணிக்கு அடக்கம் என அறிவித்துவிட்டு தஞ்சை,

நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பல வாகனங்களில் 300க்கும் மேற்பட்ட நபர்களை திரட்டிக்கொண்டு காலை 9.45 மணிக்கு வந்துள்ளனர். அப்போது பள்ளிவாசல் நிர்வாகிகள் ஒரு சிலர் மட்டுமே கபரஸ்தான் நுழைவாயில் அருகில் நின்றுள்ளனர்.

கபரஸ்தானுக்கு வெளியில் கும்பகோணம் காவல் துணை கண்காணிப்பாளர் கணேசமூர்த்தி தலைமையில் திருநீலகுடி, திருவிடைமருதூர் உதவி ஆய்வாளர்கள் சுமார் 8 போலிஸார், திருவிடை மருதூர் வட்ட ஆட்சியர், வருவாய் ஆய்வாளர்,

கிராம நிர்வாக அதிகாரி, தலையாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இருந்துள்ளனர். கபரஸ்தானை நோக்கி வேகமாக வந்தவர்களை டி.எஸ்.பி,

தாசில்தார் தடுத்து நிறுத்த முயல அவர்களை விலக்கி விட்ட படியே பூட்டியிருந்த கபரஸ்தான் கதவை உடைத்து திறந்து அத்து மீறி நுழைந்து குழிதோண்டி உடலை அடக்கம் செய்வதில் ஒரு கோஷ்டியினர் கவனம் செலுத்த,

இன்னொரு கோஷ்டி ஆடுதுறை ஜமாஅத்தினர் வந்துவிடாமல் பாதுகாக்க, சுமார் 20 பேர் அடங்கிய மூன்றாவது கோஷ்டி ஆயுதங்களுடன் வன்முறை வெறியாட்டத்தில் இறங்கினாராம்.

பள்ளிவாசல் நிர்வாகிகள் ஏ.எம். ஷாஜஹான், ஓ. முஹம்மது ஹுசைன் சர்புதீன் ஆகியோரை குறிவைத்து அக்கோஷ்டியினர் சகட்டு மேனிக்கு தாக்கத்தொடங்கினராம். வன்முறையாளர்களில் ஒருவர் ஷாஜஹான் கண்ணை குறிவைத்து பலமாக தாக்க நிலைகுலைந்த ஷாஜஹான் கீழேவிழ,

மண்வெட்டியின் பின்புறத்தால் இன்னொருவர் ஓங்கி அடிக்க, சுற்றி நின்ற மற்றவர்கள் கம்பு, தடிகளால் தாக்க கீழே விழுந்துகிடந்த ஷாஜஹான் மீது படுத்து அத்தனை அடிகளையும் தாங்கள் பெற்றுள்ளனர்.

ஓ. முஹம்மது ஹுசைன், முருகன் என்ற அய்யப்பன், அன்வர், முஹம்மது இக்பால், முஹம்மது அலி ஆகியோர். “அவர்கள் 6 பேரும் அடிகளை தாங்கள் வாங்கிருக்காவிட்டால் நான் உயிரிழந்து இருப்பேன் அல்லது நிரந்தர ஊனமாகியிருப்பேன்“ என கூறுகிறார் ஏ.எம். ஷாஜஹான்.

பின்னர் ஷாஜஹான் 108ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தலை, முகத்தில் உள்ள காயத்துக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்றுகடுமையாகபாதிக்கப்பட்ட ஓ. முஹம்மது ஹுசைன் ஆர். சர்புதீன் ஆகியோரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் காவல்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்ததுதான்கொடுமை.

சம்பவம் நடந்து கொண்டிருந்த போதேஏராளமான போலிஸாருடன் வருகைதந்த தஞ்சை மாவட்டகாவல் கண்காணிப்பாளர் தர்மராஜ், டி.என்.டிஜேவினர்கலைந்து சென்ற நொடியிலேயே காவலர்களையும் போகச்செய்துவிட்டு திரும்பிவிட்டார்.

அதன்பின்னர் தாக்கியவர்கள்மீதும், தாக்குதலுக்கு ஆளாகி படுகாயமடைந்தவர்கள் மீதும் வழக்குகள் பதியப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமை என்கின்றனர் ஆடுதுறை ஜமாஅத்தினர்.

“நாங்கள்தான் தாக்கினோம் - தாக்குவோம் காவல்துறையினரே எங்களுக்குவழிமுறைகளை சொல்லித்தந்துள்ளனர் என டி.என்.டிஜே வினர் கூறும் வீடியோ பதிவுகள் உலகம் முழுவதும் பரப்பப்பட்டு வருவது காவல் துறையினரிடமும் ஆதாரமாக உள்ளதாக காவல் அதிகாரிகளே குறிப்பிடுகின்றனர்.

ஏ.எம். ஷாஜஹான் குறிவைக்கப்பட்டதேன்? மனிதநேயர், சமூக சேவகர், கல்வியாளர், சமயநல்லிணக்கஆர்வலர் என அனைவராலும் போற்றப்படும் ஏ.எம்.ஷாஜஹான் ஏன் குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டார் என விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

ஏ.எம். ஷாஜஹான் கூட்டு முயற்சியில் திருமங்கலக் குடியில் அஸ்-ஸலாம் பொறியியல் கல்லூரியை தொடங்கிதாளாளர்

பொறுப்பேற்று திறம்பட நடத்துவதோடுஆயிரக்கணக்கான மாணவர்கள் உயர்கல்வி பெறவும் அதே சமயம் ஏழை மாணவர்கள் இலவச கல்வி பெறவும் வழி வகுத்திருப்பதால் அவருக்கு செல்வாக்கு கூடுகிறது என்ற குறுகிய எண்ணம்.

சமய நல்லிணக்கத்துக்கும், மஹல்லா ஜமாஅத் ஒற்றுமைக்கும் அடித்தளமாக அமைந்த நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த நாள் விழாக்கள் கடந்த சில வருடங்களாக முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்ட நிலையில்

கடந்த 3 வருடங்களாக திருவிடைமருதூர் வட்டாரத்தில் 33 மஹல்லா ஜமாஅத்துகளை ஒருங்கிணைத்து நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த தின விழாக்களை ஆடுதுறையிலும்சென்ற ஆண்டு திருமங்கலக் குடியிலும்,

இந்த ஆண்டுஆவணியாபுரத்தில் நடத்த அனுமதி கிடைக்காததால்அதன் எல்லையான கிரஸண்ட் பள்ளி வளாகத்திலும் நடத்தி சகோதர சமுதாய அறிஞர்களை பேசவைத்து 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களையும் பங்கேற்கச்செய்தார் ஏ.எம். ஷாஜஹான்.

இதன் காரணமாகவே அவர்தாக்கப்பட்டதாக கூறுகிறார்கள். ஏ.எம். ஷாஜஹான் உள்ளிட்டோர் தாக்கப்பட்ட செய்தி அறிந்ததும் அனைத்துக்கட்சி தலைவர்கள் நாடாளுமன்ற சட்டமன்ற

இந்நாள் முன்னாள் உறுப்பினர்கள் மார்க்க அறிஞர்கள் சகோதர சமுதாயங்கள், சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் அணி அணியாக வந்து பார்த்து நலம் விசாரித்துஆறுதல் கூறினர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் மருத்துவமனையில் பார்த்து விவரங்களை கேட்டறிந்து

பின்னர் கும்பகோணத்தில் துணை கண்காணிப்பாளர் கணேசமூர்த்தி தஞ்சையில் காவல் கண்காணிப்பாளர் தர்மராஜ் ஆகியோரை சந்தித்து நிலவரங்களை எடுத்துக்கூறினார்.

இந்தியயூனியன் முஸ்லிம் லீக் மாநிலபொதுச்செயலாளர்கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர், மாநில செயலாளர்காயல் மகபூப் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நேரில்ஆறுதல் கூறியதோடு அதிகாரிகளிடமும் நிலைமைகளைஎடுத்துரைத்தனர்.

மாநில துணைத்தலைவர்கள் மௌலானா தளபதி ஷபீகுர்ரஹ்மான், அதிரை எஸ்.எஸ்.பி நஸ்ருதீன் உள்ளிட்டமுன்னணியினர் பார்வையிட்டு தங்களிடம் விசாரித்த

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் ஷைகுல்ஹதீஸ் மௌலானா ஏ.இ.எம். அப்துர்ரஹ்மான் ஹஸ்ரத்மற்றும் வக்ஃப் வாரிய உறுப்பினர்களிடம் நிலைமைகளை விளக்கியுள்ளனர்.

காலம் காலமாக பின்பற்றப்பட்டுவரும் நடைமுறைகளைகாலிலே போட்டுமிதிப்போம், முஸ்லிம்களின் தனித்தஅடையாளங்களை உதாசீனப்படுத்துவோம் என்பவர்கள் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் நல்லடக்க நிகழ்ச்சியை நினைத்துப்பார்க்கட்டும்.

ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட ஜனாஸாவை பெற்று குளிப்பாட்டி கபனிட்டு பள்ளிவாசலில் தொழுகை நடத்தி குர்ஆன் வசனங்களை ஓதி பிரார்த்தனை செய்து நல்லடக்கம் செய்வதில் அவர்குடும்பம் உறுதியாக இருந்தது.

தங்களுக்கென தனி வழிமுறைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டோம் என்பவர்கள், மத்ஹப் கூடாது என மறுப்பவர்கள், சுன்னத் ஜமாஅத் பள்ளிகளில் அடம்பிடிப்பதுபோல்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸ்களில் ‘மௌலூது ஓதுவோம்; கந்தூரி எடுப்போம்“என சுன்னத் வல் ஜமாஅத்தினர் அடம்பிடித்தால் நிலைமை என்ன வாகும்?

வரம்பு மீறுவோரை சமூகமும் சட்டமும் வேடிக்கை பார்த்தால் நாடு சுடுகாடாகிவிடும் என்ற ஆடுதுறை மக்களின் வேதனை சமுதாயத்தின் மற்றும் அரசின் கவனத்துக்கு உகந்தது என்பது நமது நேரடி விசாரணையில் தெரிய வந்ததாகும்... மணிச்சுடர் நாளிதழ்
Tags:
Privacy and cookie settings