மாரியம்மன் கோவில் விழாவில் குத்தாட்டம் போட்ட எஸ்.ஐ !

தர்மபுரி அருகே நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவின் மது போதையில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் குத்தாட்டம் போட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 SI dances for the tune of cinema song in temple festival
தர்மபுரி மாவட்டம் அதகப்பட்டி கிராமத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதையொட்டி இரவில் பெரிய ஸ்பீக்கர் மூலம் சினிமா பாடல்கள் ஓலிப்பரப்பட்டது.

அப்போது சிறுவர்கள் சிலர் பாடலுக்கு ஏற்ப நடனமாடிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அந்த வழியாக எஸ் ஐ ஒருவர் வந்ததுள்ளார். அவர் பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தவர்.

நல்ல போதையில் இருந்த அவர் சிறுவர்கள் ஆடுவதைக் கண்டு உற்சாகத்தில் தானும சினிமா பாடலுக்கு ஏற்ப குத்தாடடம் போட்டார். பின்னர் போதை தலைக்கு ஏறியதால் திடீரென சவுண்ட் சர்வீஸ் வேலை செய்யும் ஆட்களை அடிக்க பாய்ந்தார்.

இதை பார்த்த விழா கமிட்டியினர் எஸ்ஐ - யை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் முடியவில்லை. நேரம் செல்ல செல்ல கூட்டம் கூடியதால் போதை தெளித்த அவர் அங்கிருநது நைசாக நழுவி தப்பி ஓடினார்.

தகராறு செய்தவர் போலீஸ்காரர், அதுவும் எஸ்ஐ என்பதால் பொதுமக்கள் சார்பில் யாரும் புகார் கொடுக்க முன்வரவில்லை. இந்த சம்பவத்தால் அங்கு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.
Tags:
Privacy and cookie settings