மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 50 மொழிகளுக்கான டிரான்ஸ்லேட்டர் செயலி யை (ஆப்) அறிமுகம் செய்துள்ளது. இது கூகுள் டிரான்ஸ்லேட்டரை விடவும் வசதியானது.
கூகுள் டிரான்ஸ்லேட்டர் தற்போது 27 மொழிகளுக்கு மட்டுமே உதவக் கூடியது. மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ் என எல்லா இயங்கு தளத்துக்கும் கிடைக்கிறது.
போன், டேப்லட், ஆப்பில் வாட்ச், ஸ்மார்ட் வாட்ச் போன்றவற்றில் இதைப் பயன்படுத்த முடியும்.
ஒருவர் ஒரு மொழியில் பேசவோ எழுதவோ (டைப்பிங்) செய்தால் அதை இன் னொரு மொழிக்கு (குறிப்பிட்ட 50 மொழிகளுக்குள்) மாற்றிக் கொள்ளமுடியும்.
இந்திய மொழிகளில் ஹிந்திக்கு மட்டுமே 50 மொழிகள் பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.
இதையடுத்து தமிழும் இப்பட்டியல் இடம் பெற வேண்டும் – அதுவும் உடனடியாக என்று கோரிக்கை வலுவாக கிளம்பியுள்ளது.
இந்தப் புதிய செயலியால் கூகுள் இயங்கும் பகுதிக்குள் நுழைந்துள்ளது மைக் ரோசாஃப்ட் நிறுவனம்.
கூகுள் பல ஆண்டுகளாக இணையம் ஆண்ட்ராய் டு, ஐஓஎஸ் வழியாக மொழிமாற்றம் தொடர்பான வசதிகளைச் செய்து தருவது குறிப்பிடத்தக்கது.
Tags: