வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நிறுத்தம்...தலைமைத் தேர்தல் ஆணையம் !

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
 
நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 

ஆதார் அட்டை பெற்று இருந்தால் தான் அரசின் மானியம் உள்ளிட்ட சலுகை களை பெற முடியும் என்று மத்திய அரசின் நிறுவனங்கள் தெரிவித்து வந்தன.


ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தி பல்வேறு தரப்பினரும் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். இந்த வழக் குகளை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றிய உச்ச நீதிமன்றம், அதே நேர த்தில் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. 

அதில், அரசின் சலுகைகளை பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் கிடையா து. பொது வினியோக திட்டம், சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகம் தவி ர்த்து பிற நோக்கங்களுக்கு ஆதார் அட்டை பயன்படுத்தப்படக்கூடாது என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. 
 
முன்னதாக, வாக்காளர் பட்டியலில் போலிகளை தவிர்ப்பதற்காக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியிருந்தது. இதற்காக வீடு வீடாக ஆதார் எண்ணை சேக ரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு இருந்தனர். 

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால், இந்த பணி நிறுத்தப்பட்டுள் ளது. இது தொடர்பாக அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை கேட்க கூடாது எனவும் கேட்கும் அதிகா ரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings