ஓட்டலில் பெண் வாடிக்கையாளர் புகார் செய்ததால் வெந்நீரை ஊற்றிய சர்வர்!

1 minute read
கிழக்கு சீனாவின் வென்ஜோ நகரில் உள்ளது ஹாட் ஸ்பாட் ஓட்டல். இந்த ஓட்டலுக்கு கடந்த 24 ந்தேதி மிஸ் லின் ( வயது 29 ) என்பவர் தனது குடும்பத்தினருடன் உணவருந்த சென்றார்.
ஓட்டலில் பெண் வாடிக்கையாளர் புகார் செய்ததால் வெந்நீரை ஊற்றிய சர்வர்!
அவர்கள் டேபிளுக்கு  ஷூ ( வயது 17 ) என்ற வாலிபர் சேவை செய்தார். ஷூ குறித்து லின் ஓட்டல் உரிமையாளரிடம் அவரதுச் சேவை சரியில்லை புகார் செய்தார். பின்னர் தனது குடும்பத்துடன் சேர்ந்து லின் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது ஷூ நன்கு கொதித்து கொண்டு இருந்த வெந்நீரை எடுத்து வந்து லின் மீது ஊற்றினார். அதோடு விட வில்லை லின்னை பயங்கரமாக தாக்க தொடங்கினார்.  

ஓட்டலில் இருந்தவர்கள் லின்னை ஷூவிடம் இருந்து மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். லின்னின்  உடலின் ஒரு பகுதி முழுவதும்  வெந்நீர் பட்டு படுகாயம் ஏற்பட்டு உள்ளது.
காட்சியை காண இங்கே செல்லவும்!
தோல் உரிந்து சிகப்பு நிறமாக காட்சி அளித்தது. அவரது முகம் கழுத்து மற்றும் தோள்பட்டை முழுவதும் காயம் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக போலீசார் ஷூவை கைது செய்தனர். தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த காட்சிகள் மூழுவது அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது . அந்த காட்சிகள்.
Tags:
Today | 24, March 2025
Privacy and cookie settings