ஐஸ்வர்யா தனுஷ் ஆரம்பித் துள்ள புதிய படத் தயாரிப்பு நிறுவன த்துக்கு டென் எண்டர்டெயின்மென்ட் என்று பெயர் சூட்டி யுள்ளார்.
ரஜினியின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, இப்போது திரைப்பட இயக்குநராகவும் உள்ளார். 3, வை ராஜா வை படங்களை இயக்கியுள்ள அவர் அடுத்து தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
முதல் கட்டமாக குறும்படங்களைத் தயாரித்து வெளியிடத் திட்டமிட்டு, தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதற்கு டென் எண்டர்டெயின்மென்ட் என்று பெயர் சூட்டியுள்ளார்.
இந்த நிறுவனம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் குறும்படங்களைத் தயாரிக்கவிருக்கிறது.
தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனத்தின் துணை நிறுவனமாக டென் எண்டர்டெயின்மென்ட் செயல்படும்.
இது குறித்து ஐஸ்வர்யா கூறுகையில், "நான் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி யதற்குக் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி யளிக்கிறது. உற்சாகப்படுத்த ஏராளமான திறமை யாளர்கள் காத்திரு க்கிறார்கள்.
தென்னிந்திய மொழிகளில் குறும் படங்களை எனது நிறுவன த்தின் யுட்யூப் சேனல் மூலம் வெளியி டுவதில் பெருமை அடைகிறேன்," என்றார்.