உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் வினுசக்கரவர்த்தியை நேரில் சந்தித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலம் விசாரித்தார்.
சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழ்த் திரையுலகின் பிரபல குணச்சித்திர நடிகர் வினுசக்ரவர்த்தி சிகிச்சைப் பெற்று வருகிறார்.
சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை இன்று(சனிக்கிழமை) தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார்.
அப்போது அவரிடம் விஜயகாந்த், விரைவில் பூரண குணமடைந்து வழக்கம்போல் படப்பிடிப்புகளில் கலந்துகொள்வீர்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.