மலை உச்சியில் கண்ணாடி பால்கனி!

0
கட்டிடத்தின் பால்கனியில் நின்று கொண்டு சாலையை வேடிக்கை பார்ப்பதெனில் நமக்கு கொள்ளை பிரியம். ஆனால், அதுவே 4000 அடி உயரத்தில் உள்ள மலை உச்சியில் பால்கனி அமைத்து,

 

பள்ளத்தாக்கை வேடிக்கை பார்ப்பதென்றால் யாருக்குத்தான் பிடிக்காது? இந்த புதுமையான ஐடியாவை செயல்படுத்தி வெற்றி கண்டிருக்கிறது அமெரிக்காவின் அரிசோனா மாகாண அரசு.

இங்குள்ள கிராண்ட் கேன்யான் என்கிற கிராமம் மலைப் பள்ளத் தாக்குகளைக் காண விரும்பும் சுற்றுலா பயணிகள் அடிக்கடி வந்து போகும் இடமாகும். இங்குள்ள சுற்றுலா வளத்தை இன்னும் ஒரு படி உயர்த்த கிராண்ட் கேன்யான் நகராட்சி திட்ட மிட்டது.

அதன்படி, எஸ்.என்.என். என்கிற ஆர்க்கிடெக்ட் அமைப்புடன் ஆலோசித்து, இப்படி ஒரு புது வடிவ கண்ணாடியால் ஆன பால்கனியை அமைத்து மவுண்டெய்ன் ஸ்கை வாக் என பெயரிட்டிருக்கிறது. ஒரே சமயத்தில் 120 மக்கள் வரை பார்வையிடக் கூடிய இந்த ஸ்கை வாக்கின் முழு நீளம் 175 அடியாகும்.

ஆனால், 70 அடி மட்டுமே மலையிலிருந்து வெளியே நீட்டியிருக்கும். மீதி 105 அடி நீளம் மலை உச்சியிலேயே நன்கு பொருத்தப்பட்டிருக்கிறது.

அதாவது, ஒரு மடங்கு வெளியேயும், ஒன்றரை மடங்கு உள்ளேயும் பொருத்தப்பட்டிருப்பதால் பாதுகாப்புக்கு 100 சதவீத கியாரண்டி உண்டு.

அதுவும் எப்படி பொருத்தப்பட்டிருக்கிறது என்றால், கொண்டை ஊசி வடிவம் கொண்ட இந்த ஸ்கை வாக்கின் இரு முனைகளும் 46 அடி நீளமுடைய 94 போல்ட்டுகளைக் கொண்டு நன்றாக முடுக்கப்பட்டிருப் பதுடன், அதன் மீது கட்டுமானங்களும் எழுப்பப்பட்டிருக்கிறது.

பால்கனியின் அகலம் 10 அடியாகவும், அதன் ஒட்டுமொத்த சுற்றளவு 150 அடியாகவும், பால்கனியின் கண்ணாடி தடுப்பு 5 அடியாகவும் உள்ளது. பால்கனி தரைப்பகுதி கண்ணாடியால் அமைந்திருந்தாலும், இரு புறமும் இரும்புத் தகடுகளால் ஆன தடுப்புகளும் உண்டு.

100 மைல் வேகத்தில் காற்று முகத்தில் அறையும் அனுபவத்தை பெறுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிகிறார்கள். தலைக்கு 25 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த ஸ்கை வாக் அமைப்பதற்கு 30 பில்லியன் டாலர் செலவானதாக கூறப்படுகிறது. நம்மூர் மலை உச்சிகளிலும், நீர் வீழ்ச்சிகளிலும் இது போன்ற கண்ணாடி பால்கனிகள் பொருத்தப்பட்டால் அவை வரவேற்புக் குரியதே.

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings