கூகுளுக்கு போட்டியாக பேஸ்புக் வீடியோ சாட்டிங் அறிமுகம் !

சமூகவலையமைப்பான பேஸ்புக் எதிர்வரும் புதன்கிழமையன்று வீடியோ செட்டிங் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
கூகுளுக்கு போட்டியாக பேஸ்புக் வீடியோ சாட்டிங் அறிமுகம் !
ஸ்கைப் நிறுவனத்துடன் இணைந்தே பேஸ்புக் இச்சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஷூக்கர் பேர்க் அண்மையில் தனது சமூகவ லையமைப்பு அற்புதமான சேவை ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ள தாக அறிவித்திருந்தார்.

அவரது கருத்து அச்சேவை தொடர்பில் பாரிய எதிர்பார்ப்புக்களை ஏற்படு த்தியிருந்த நிலையிலேயே இத்தகவல் கசிந்துள்ளது.
பேஸ்புக் தற்போது சுமார் 750 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டு ள்ளதுடன், ஸ்கைப் 170 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளது.

ஸ்கைப்பை மைக்ரோசொப்ட் நிறுவனம் 8.5 பில்லியன் அமெரிக்க டொல ர்களுக்கு மே மாதம் கொள்வனவு செய்திருந்தது.
 கூகுளுக்கு போட்டியாக பேஸ்புக் வீடியோ சாட்டிங் அறிமுகம் !
இதே வேளை கூகுள் நிறுவனம் அண்மையில் “கூகுள் +” என்ற சமூகவ லையமைப்பு ஒன்றினை அறிமுகப்படுத்தியது. இதில் வீடியோ செட்டிங் வசதி உள்ளடக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே பேஸ்புக் இவ்வசதியை தனது பாவனையாளர்களுக் கும் வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்க தாகும்.
Tags:
Privacy and cookie settings