விநாடி தோறும் மாறிக் கொண்டிருக்கும் டிஜிட்டல் உலகில், இப்போதைக்குப் பயன்பாட்டில் இருக்கின்ற ஒரு சாதனம், அடுத்த நாளே பழைய சாதனமாக, முழுமையாக பயன் படுத்த முடியாத ஒன்றாக மாறி வருகிறது.
அதிலும் இப்போதெல்லாம் ஒருவர் கூட டயலைச் சுழற்றி தரை வழி இணைப்பு தொலைபேசியைப் பயன்படுத்துவ தில்லை. பலருக்குத் தங்கள் மொபைல் எண்களே மறந்து போகின்றன.
மேலும் பலருக்கு தம் மனைவி மற்றும் தம் குழந்தைகளின் தொலைபேசி எண்களைக் கூட நினைவில் வைக்காமல், அவற்றைப் பயன்படுத்தும் சாதனங் களையே நம்பி இருக்கிறோம். கம்ப்யூட்டர்களின் இடத்தில் லேப்டாப், டேப்ளட் பிசி, ஸ்மார்ட் போன் என சுழன்று வருகின்றன.
இணையத் தொடர்பின் வேகம் மின்னலுக்கு இணையாகி வருகிறது. மிக விரைவில் டிஜிட்டல் திரைகள் விரிந்து, நம் விழிகளின் அசைவின் கட்டளைகளை ஏற்று செயல்படுத்தும் நாள் இன்னும் சில மாதங்களில் வந்துவிடுமாம்.
இந்நிலையில் மின்னணு பொருட்களை தயாரிக்கும் சாம்சங் நிறுவனம் தன்னுடைய முதல் வயர்லெஸ் மொபைல் சார்ஜ் மானிட்டரை பற்றிய வீடியோவை வெளியிட்டுள்ளது.

வீடியோவில் இருக்கும் தகவலின் படி SE370 என்ற இந்த புதிய மானிட்டரின் முன் பகுதியில் இருக்கும்ஸ்டாண்டில் ஸ்மார்ட்போனை வைக்கும் போது அது தானாகவே சார்ஜ் ஆக தொடங்கி விடுகிறது.
ஆனால், ஸ்மார்ட்போன் வயர்லெஸ் மொபைல் சார்ஜ் வசதியைப் பெற்றிருக்க வேண்டும்.
இந்த புதிய மானிட்டர் எப்போது விற்பனைக்கு வருகிறது என்பது பற்றிய தகவல் மற்றும் அதன் விலை பற்றிய தகவல்களை சாம்சங் நிறுவனம் வெளியிடவில்லை.
எனினும் வரும் செப்டம்பரில் ஐரோப்பாவில் நடக்க விருக்கும் மிகப் பெரிய மின்னணு பொருள் விற்பனை சந்தையில் இந்த மானிட்டர் அறிமுகப் படுத்தப் படலாம் எனக் கூறப்படுகிறது.