கொழும்பி லுள்ள இந்திய தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் படத்திற்கு இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன அஞ்சலி செலுத்தினார்.
இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கடந்த 27ஆம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்கு சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் உள்ள பேக்கரும்பு திடலில் இன்று நடைபெற்றது.
இந்நிலையில், அப்துல் கலாமின் மறைவையொட்டி இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, கொழும்பி லுள்ள இந்திய தூதரகத்திற்கு சென்று
அங்கு வைக்கப் பட்டிருந்த கலாமின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். இதை யடுத்து அங்கிருந்த சிறப்பு பதிவேட்டில் தனது இரங்கல் செய்தியை பதிவு செய்தார்.
மேலும், தனது அனுதாபச் செய்தியை இந்திய குடியரசுத் தலைவரிடம் அளித்திட இந்து சமய விவகாரத்துறை அமைச்சர் சுவாமி நாதனை அனுப்பி வைத்தார்.
இதேபோல், இலங்கை வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுத பாணி ஆகியோர் அப்துல் கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.