வலங்கைமான் அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு தந்தை-மகன் கைது

வலங்கைமான் அருகே விவசாயியை அரி வாளால் வெட்டியது தொடர்பான வழக்கில் தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.

விவசாயி

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த வேடம்பூர் தோப்பு தெருவை சேர்ந்தவர் சின்னையன் மகன் சவுரிராஜன் (வயது32). விவ சாயி. சம்பவத்தன்று இவரிடம் இதே பகுதியை சேர்ந்த சதா சிவம்,

அவருடைய மகன் காரல்மார்க்ஸ், மகேந்திரன் மகன் விஜய், தியாகராஜன் மகன் திலிப் ஆகிய 4 பேரும் கோவில் கட்டுவதற்காக நன்கொடை கேட்க வந்தனர். அப்போது சவுரிராஜன் பணம் கொடுக்க முடியாது, கோவி லுக்கு பொருட்கள் வாங்கி தருகிறேன் என்று கூறினார்.

இதனால் இவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த சதாசிவம் அரி வாளால் சவுரிராஜனை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த சவுரிராஜன் கும்ப கோணம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தந்தை-மகன் கைது

இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதாசிவத்தையும், அவ ருடைய மகன் காரல் மார்க்சையும் கைது செய்தனர்.

வழக்கு தொடர்பாக விஜய், திலிப் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 
Tags:
Privacy and cookie settings