மருத்துவமனையில் தொடங்கி மணவறையில் தொடரும் பந்தம்

0 minute read
இங்கிலாந்தில் கல்லீரல் மாற்று சிகிச்சைக்காக கடந்த 2012-ஆம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவர் அங்கே ஏற்பட்ட சந்திப்பில் காதலர்களாகி சமீபத்தில் திருமணமும் செய்திருக்கின்றனர்.


வாய்னே போடென்(49) என்பவருக்கு தானம் செய்யப்பட்டிருந்த கல்லீரல் அவருக்கு ஒத்துப் போகாததால், அடுத்த கல்லீரலுக்காக மருத்துவமனையில் காத்திருந்தார்.

ஷெல்லி (35) என்ற பெண்ணும் இதே பிரச்சனையால் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஒரே பிரச்சனையால் பாதிக்கப்பட்டதாலேயே அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. ஷெல்லி குணமாகி முதலில் வீடு திரும்பினார்.

வெய்னேவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டதை அறிந்த பின்னர் மருத்துவமனைக்கு ஷெல்லி நேரில் வந்து பார்த்தார். இப்படியே நல்ல நட்பாக தொடர்ந்த உறவு அடுத்த வருடத்திலேயே நிச்சயதார்த்தம் வரை சென்றது.

இவர்கள் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் பணிபுரிவோர் முழுவதும் இவர்களது திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளனர்.

அனைத்து காதல்களும் திருமணத்தில் முடிவதில்லை. இந்த பிரச்சனை உலகெங்கும் உள்ளதுதான்.

திருமணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத அந்த நாட்டில், காதல் என்பது கல்யாணம் வரை போவது சற்று அரிதான சம்பவம்தான்.
Tags:
Today | 14, April 2025
Privacy and cookie settings