வெளி நாடுகளுக்கு தொழிலாளியாக செல்பவர்கள் தாங்கள் பணியாற்றும் காலங்களில் உயர்ந்த பதவிகளுக்கு செல்ல முடியுமா வாழ்வில் உயர முடியுமா என்று
தன்னம்பிக்கை இழப்பவர்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் தரும் வகையில் பல்லாயிரக் கணக்கானோர் பணியாற்றும் நிறுவனத்தில் தொழிலாளியாக சேர்ந்து பணிபுரிந்து தற்போது நிர்வாக இயக்குநராக உயர்ந்து
தன்னம்பிக்கை சிகரமாக ஒளிர்கிறார் ராமநாதரபுரம மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த தமிழர் சாஹுல் ஹமீது.
இவர் கூறியதாவது
1978ல் துபாயில் தொழிலாளியாக இடிஏ நிறுவனத்தின் எம்பிஎம் கிளீனிங் பிரிவில் எனது பணியை மிககுறைந்த சம்பளத்தில் தொடங்கினேன்.
பின்னர் இன்று பல்வேறு டிவிசன்களை உள்ளடக்கிய பெசிலிடிஸ் மேனேஜ்மென்ட் என்றழைக்கப்படும் பிரிவின் நிர்வாக இயக்குநராக உள்ளேன்.
அன்று வாங்கிய சம்பளத்தை விட இன்று 100 மடங்கு அதிக பெறுகிறேன். இன்று இந்நிறுவனத்தில் ஆயிரக் கணக்கானோர் பணியாற்று கின்றனர்.
அமீரகத்தில் உள்ள நிறுவனங்களிடம் முறையாக ஒப்பந்தம் செய்யப்பட்டு கிளினிங் பணிகளை மேற்கொள்வது செய்வது
எங்களது நிறுவன த்தின் பணியாகும் ஆரம்ப காலங்களில் இது போன்று கிளினிங் பணிகளு க்கு நானும் சென்றுள்ளேன்.
செய்யும் தொழிலை நான் மிகவும் நேசிப்பேன் அது சுத்தப்படுத்தும் பணியாக இருந்தாலும் அதில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதில் ஆர்வமுள்ளவன்.
அடிக்கடி விடுமுறை எடுக்க மாட்டேன் பணியை நிறைவு செய்து விட்டு தான் அடுத்த செயலுக்கு செல்வேன் .மேலும் புதிய வர்த்தக ரீதியாக வியாபரத்தை அதிக படுத்த எனது நிறுவனத்திற்கு உதவினேன்.
இப்படி கடும் உழைப்பின் காரணமாக எனது பொறுப்பு உயத்தப்பட்டு சூப்பர்வைர் மேலாளர் என படிபடியாக இன்று நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறேன்.
எனது சிபாரிசில் பணிக்கு வருபவர்களுக்கு சொல்லும் அறிவுரை உதவி செய்கிறேன் ஆனால் சலுகை செய்ய மாட்டேன் என தெரிவித்து விடுவேன் .
வெளி நாடுகளுக்கு தொழிலாளர்களாக வருபவர்கள் மனம் தளர விடாமல் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி நம்பிக்கையுடன் பணியாற்றினால் நிச்சயம் வாழ்வில் வளம் பெற முடியும்.
எக்ஸ்போ 2020 துபாயில் நடைபெற உள்ளது. இதனை யோட்டி ஆயிரக் கணக்கான பணிகள் உருவாகும் இதனை யோட்டி ஏராளமான வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.