சமையல் கியாஸ் சிலிண்டரை தொடர்ந்து, ரேஷன் உணவுப் பொருட்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் முதல், மானியத்தை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தும் திட்டம் அமலுக்கு வருகிறது.
இதையொட்டி தமிழகத்தில் வழங்க திட்டமிட்டுள்ள ஸ்மார்ட் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணைக் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று கெடுபிடி துவங்கப் போகிறது.
பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தில் சீர்திருத்தங்கள் செய்வதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
ஏற்கனவே சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரொக்க மானியம் வழங்கும் திட்டம், இந்த ஆண்டு தொடக்கம் முதல் அமல்படுத்தப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது,
அடுத்த கட்டமாக ரேஷன் கடைகளில் பொது வினியோக திட்டத்தின் கீழ் மக் களுக்கு வினியோகிக்கப் படுகிற அரிசி, சர்க்கரை, கோதுமை போன்ற
உணவுப் பொருட்களுக்கான மானியத்தையும், பொது மக்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த திட்டம் முதலில் வரும் செப்டம்பர் மாதம் முதல் புதுச்சேரி, சண்டிகார், தத்ரா–நகர்ஹவேலி ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படுகி றது.
இந்நிலையில் இனி ஆதார் எண் இணைக்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்தாகி விடும் என்ற தகவல் வெளியாகி யுள்ளதால் ஆதார் அட்டை பெறாத பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 2 கோடி ரேஷன் கார்டு அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 2005 முதல் வழங்கபட்ட ரேஷன் கார்டு கடந்த 2009 உடன் காலாவதி ஆன நிலையில்
புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டு இருக்க வேண் டும். ஆனால், இதற்கு பதிலாக உள்தாள் ஒட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2012ல் ரூ.300 கோடி செலவில் நவீன வடிவிலான ரே ஷன் கார்டு (ஸ்மார்ட் கார்டு) வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதன் மூலம் போலி ரேஷன் கார்டு வழங்கப்படுவதை தடுக்க முடியும் என்று அரசு நம்பியது.
இதற்காக கடந்த 2014ல் அக்டோபர் மாதத்தில் டெண்டர் விடப்பட்டு இதற்கான பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
ஆதார் எண்ணை அடி ப்படையாக கொண்டு கண் கருவிழி, கை ரேகையை பதிவு செய்து ஸ்மார்டு கார்டு வழங்க தீர்மானிக்கப்பட்டது.
ஆனால், ஆதார் எண் அட்டை பதிவில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் ஸ்மார்டு கார்டு தயாரிக்கும் பணி கிடப்பில் போடப்பட்டன.
மாறாக அந்த தனியார் நிறுவனம் புதிய மென்பொருள் மூலம் ஸ்மார்ட்ட கார்டு வழங்க தீர்மானித்தது.
அதே சமயம், உள்தாள் ஓட்டிய ரேஷன் கார்டு வரும் டிசம்பர் மாதத்துடன் முடி வடைகிறது. கடந்த 2005ல் வழங்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆன நிலையில், ஒரே கார்டை பயன்படுத்தி வருவதால் கிழிந்த நிலையில் உள்ளது.
இதனால், நடப்பாண்டில் ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டிய கட்டாயம் இருப் பதால் மீண்டும் ஆதார் எண்ணை இணைத்து ஸ்மார்ட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
காஸ் சிலிண்டர் மற்றும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பு பணி முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக ரேஷன் கார்டுகளிலும் ஆதார் எண் இணைக்கும் பணி துவங்கி உள்ளது.
இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதில், ரேஷன்கார்டுக்கான வழக்கமான விவரங்களுடன், ஆதார் எண், வங்கி கணக்கு எண், தொலைபேசி எண் விவரங்களும் கேட்கப்பட்டுள்ளன.
ஆதார் எண் இணைக்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்தாகிவிடும் என்ற தகவலால், ஆ தார் அட்டை பெறாத பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து உணவு வழங்கல் பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், போலி ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கையை முற்றிலும்
ஒழிக்கும் நோக்கத்தில் ரேஷன் கார்டுகளிலும் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஆதார் எண் விவரங்களை ரேஷன்கார்டுகளில் இணைக்க தற்போது நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விண்ணப்பங்கள் அனுப்பி வைக் கப்பட்டுள்ளது. நுகர்வோர்கள் விண்ணப்ப படிங்களை பூர்த்தி செய்து ஊழிய ரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இதன் பின்னர் இந்த படிவங்களில் உள்ள விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். இதன் மூலம் போலி ரேஷன் கார்டுகளை அடையாளம் காண முடியும்’’ என்றார்.
மேலும் இனி பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிற உணவுப் பொருட்களுக்கான மானியமும் நேரடியாக பொதுமக்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
எம்.பி.க்களின் வேண்டுகோளுக்கு இணங்க முதலில் புதுச் சேரி, சண்டிகார், தத்ரா–நகர்ஹவேலி ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் இது அமல்படுத்தப்ப டுகிறது.
முதலில் உணவுப்பொருள் மானியமாக ஒரு வீட்டுக்கு மாதம் ரூ.500 முதல் ரூ.700 வரையில் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
பின்னர் மண் எண்ணெய்க் கான மானியமும் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது..