தீவிரவாத விவகாரத்தை மத்திய அரசு அரசியல் செய்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது. பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து, நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்தார்.
அப்போது அவர் பேசும்போது, ''நாட்டுக்கு மிகப்பெரிய சவாலாக தீவிரவாதம் இருக்கிறது. இந்த விவகாரத்தில், நாடாளுமன்றமோ அல்லது நாடோ பிளவுபட்டு இருப்பது போன்ற தோற்றம் ஏற்படக் கூடாது.
ஒருபக்கம், நமது ராணுவ வீரர்கள் தீவிரவாதத்துக்கு எதிராக போரிட்டு தங்களது உயிரை தியாகம் செய்து வருகின்றனர். ஆனால், மறுபக்கமோ நாடாளுமன்றத்தில் நாம் கூச்சலிட்டு, இடையூறுகளை செய்து வருகிறோம்.
நாடாளுமன்றத்தில் முறைப்படி விவாதம் நடத்துவதற்கு எதிர்க்கட்சியினர் நோட்டீஸ் அளித்தால், எந்த விவகாரம் குறித்தும் விவாதிப்பதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது.
நாடாளுமன்றத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு, அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஹிந்து தீவிரவாதம் என்ற சொற்றொடரைத் பயன்படுத்தினார்.
இது தீவிரவாதத்துக்கு எதிரான நமது நடவடிக்கையை பாதித்துள்ளது. இதையடுத்து, லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் நிறுவனரான ஹபீஸ் சயீது, ப.சிதம்பரத்துக்கு பாராட்டு தெரிவித்தார்.
இதுபோன்ற மோசமான நிலைமை மீண்டும் ஏற்படுவதற்கு அரசு அனுமதிக்காது. தீவிரவாதத்துக்கு எந்த ஜாதியும், மதமும் கிடையாது. இந்தப் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து அவையில் விவாதிக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் வெளியுறவுக் கொள்கைகளால், நமது நாட்டிடம் இருந்த ரோஜாவை (திபெத்) சீனா கைப்பற்றியது. தாஷ்கண்டில் லால் பகதூர் சாஸ்திரியை (முன்னாள் பிரதமர்) இந்தியா இழக்க நேரிட்டது.
பாகிஸ்தானுடனான போரில் வெற்றி பெற்ற பிறகும், ராஜீய ரீதியிலான பேச்சுவார்த்தையில் இந்தியா தோல்வியடைந்தது" என்றார்.
இதனிடையே, தீவிரவாதத்தை வைத்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அரசியல் செய்வதாக காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.
இது குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், ''தீவிரவாத விவகாரத்தை மத்திய அரசு அரசியல் செய்கிறது. இதை காங்கிரஸ் சகித்துக் கொண்டிருக்காது.
குருதாஸ்பூர் தாக்குதல் தொடர்பாக அறிக்கை சமர்பித்த பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயன்படுத்திய வார்த்தைகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்" என்றார்.
ஆனால், அவரது கோரிக்கையை மக்களவை துணைத் தலைவர் தம்பி துரை நிராகரித்தார்.