தூக்கிலிடப்பட்ட மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனின் மனைவிக்கு எம்.பி. பதவி வழங்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி முகமது பரூக் கோசி கூறியுள்ளதால் சர்ச்சை வெடித்துள்ளது.
மும்பையில் கடந்த 1993 ஆம் ஆண்டு 13 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த அதிபயங்கர தாக்குதலில் 257 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர்.
உலகை உலுக்கிய இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு நிதி உதவி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட யாகூப் மேமன், கடந்த 30 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.
யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டு இரண்டு நாட்களே கடந்துள்ள நிலையில், உதவியற்ற நிலையில் இருக்கும் யாகூப் மேமனின் மனைவிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும்
என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவிற்கு, சமாஜ்வாடி கட்சி மகாராஷ்டிரா பிரிவு துணைத்தலைவர் முகம்மது பரூக் கோஷி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து முலாயம் சிங் யாதவுக்கு கோஷி எழுதியுள்ள கடிதத்தில், “ யாகூப் மேமனின் மனைவி ரகீன் பல ஆண்டுகளாக சிறையில் இருந்துள்ளார். அவர் எவ்வளவு பாதிக்கப்பட்டிருப்பார்.
இன்று ரகீன் உதவியற்ற நிலையில் இருப்பதை நான் கண்டறிந்துள்ளேன். இன்று நாட்டில் பல முஸ்லிம்கள் இதே போன்று உதவியற்ற நிலையில் வாடுகின்றனர்.
எனவே, ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் உதவியற்றவர்களின் குரலாக ரகீனை நாம் உருவாக்க அவரை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
எனினும், கோஷியின் கருத்தில் இருந்து சமாஜ்வாடி கட்சி விலகிக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் அபு ஆசிம் அஸ்மி கூறுகையில், " இது போன்ற பொறுப்பற்ற கருத்துகளைக் கூறும் முன் கட்சியிடம் கோஷி கலந்தாலோசிக்கவில்லை.
தனது தனிப்பட்ட தகுதியில் அவர் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார். தனது நிலைப்பாடு குறித்து கோஷியிடம் விளக்கம் கேட்கப்படும். இதைத் தொடர்ந்து தேவையான நடவடிக்கை அவர் மீது எடுக்கப்படும்” என்றார்.
சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த கோஷியின் இந்த கருத்து அக்கட்சி, வாக்கு வங்கி அரசியலில் மட்டுமே ஈடுபாடு கொண்டுள்ளது என்பதை தெளிவாக காட்டுகிறது என்று பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் மும்பை மற்றும் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.