லன்டன் விமான நிலையத்தில், ஓடுபாதையில் இருந்து விமானம் விலகியதால் ஏற்பட்ட விபத்தில், மறைந்த ஒசாமா பின்லாடன் உறவினர்கள் பலியாயினர்.
சவுதியில் ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி தனியார் ஜெட் விமானம் வந்தது.
இந்த விமானம் ஒசாமா பின்லாடன் உறவினர்களுக்கு சொந்தமானது. சலீம் விமான நிறுவனம் என்ற பெயரில் சவுதியில் செயல்பட்டு வருகிறது.
இந்த விமானம் ஹாம்ஸ்பயர் அருகே உள்ள பிளாக்புஸ் விமான நிலையம் வந்தது. ஓடு பாதையில் இருந்து விலகி ஓடியது. பின்னர் அருகில் கார் ஏலம் நடந்து கொண்டிருந்த பகுதிக்குள் மோதி நின்றது.
இதில் பல கார்கள் தீயில் எரிந்தன. விமானத்தில் இருந்த பின்லாடன் உறவினர்களான அவரது வளர்ப்பு தாய் மற்றும் சகோதரி உள்ளிட்ட 4 பேர் இறந்தனர்.
விமானத்தில் ஜோர்டான் நாட்டை சேர்ந்தவர் பைலட்டாக இருந்தார். சம்பவம் நடந்ததும் தீயைணப்பு மற்றும் மீட்பு படையினர் வந்தனர்.
ஆனாலும் விமானம் முழுமையாக எரிந்து சாம்பலானது. இறந்த பின்லாடன் குடும்பத்தினருக்கு சவுதி அரேபிய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது .
http://www.arabnews.com/featured/news/784906
இந்த சம்பவத்தில் பயங்கரவாத தலையீடு சம்பவம் ஏதுமில்லை. முதல்கட்ட விசாரணையில் விபத்தாகவே தெரிய வந்துள்ளது.
இருப்பினும் முழு அளவில் விசாரிக்கப்பட்டு வருகிறது. என லண்டன் போலீசார் தெரிவித்தார்.