இது என்ன மாயம்... மயக்கவில்லை... முதல் பார்வை !

விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் (அறிமுகம்) நடிப்பில் வெளிவரும் காதல் பட ம் என்பதால் 'இது என்ன மாயம்' மனதிலும் மேஜிக் ஜாலம் நிகழ்த்தும் என் ற எதிர் பார்ப்புடன் தியேட்ட ருக்குள் நுழைந்தோம்.
இது என்ன மாயம்... மயக்கவில்லை... முதல் பார்வை !
'இது என்ன மாயம்' மனசுக்குள் நுழைந் ததா? டிராமாவில் பணம் சம்பாதிக்க முடியாமல் சர்வைவ  லுக்காக திணறும் நண்பர்கள் ஒரு தலையாய் காதலிப்ப வர்களை, 

விரும்பும் நபருடன் சேர்த்து வைப்பதற்காக ஒரு கம்பெனி ஆரம்பிக் கிறார்கள். விக்ரம் பிரபு அந்த கம்பெனியை இயக்குகிறார்.

நவ்தீப், தான் பாடகி கீர்த்தி சுரேஷைக் காதலிப் பதாகவும், எங்களை சேர்த்து வைக்க நீங்கள் உதவுங்கள் என்றும் விக்ரம் பிரபு அண்ட் கோவிடம் கேட் கிறார். 

ஆனால், விக்ரம் பிரபு இதில் வழக்கத்துக்கு மாறாக சொதப்புகிறார். ஏன் இந்த சொ தப்பல் நிகழ்கிறது? நவ்தீப் காதல் நிறை வேறியதா? 

விக்ரம் பிரபுவின் புராஜெக்ட் என்ன ஆகிறது? இப்படியான சில கேள்விகளுக்கு கொஞ்சம் இழு வையாக பதில் சொ ல்கிறது திரைக்கதை. 

திரையில் டிராமா ஆரம்பிக்கும் போது சிரித்து மகிழும் ரசிகர் கூட்டம், காதலை சேர்த்து வைப்பதற்காக ஒரு கம்பெனி ஆரம்பிக்கலாம் என்று விக்ரம் பிரபு ஐடியா உதிர் த்ததும் நிமிர்ந்து உட்கார்கிறது. 
காதலை சேர்த்து வைப் பதற்காக விக்ரம் பிரபு செய்யும் செட்டப் மேஜிக் ரசிக்க வைக்கிறது. 

சிரிப்பும், எனர்ஜியுமாக கடந்து போகும் அந்த எபி ஸோட் மீண்டும் மீண்டும் அப்படியே ரிப்பீட் ஆவதால் பின்பாதி முழுக்க முடி யலை சாமியோவ்... 

இது முழுமை யான ரொ மான்ஸ் ஜானரில் விக்ரம் பிரபு நடித் திருக்கும் பட ம். காலேஜ் இளைஞன், கிரிக்கெட் பிளேயர் என கதாபா த்திரத்துக்குப் பொ ருந்திப் போகிறார். 

அவர் உருவமும், பாடி லேங் வேஜூம் ரொமான்ஸ் செய்வேனா என்று அடம் பிடிக்கிறது. 

ஆனால், காதலில் விழுவது, அதை ஒப்புக் கொள்ள ஈகோ காட் டுவது, பின்னர் பிரிவுக்குப் பின் காதலி க்காக மருகுவது என நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். 

அறிமுக நாயகி கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரத்துக்கான தேவையை நிறைவு செய்கிறார். கண்ணீரோடும், காதலோடும் பேசும் காட்சியில் மனதில் நிற் கிறார்.
நாசர், அம்பிகா, காவ்யா ஷெட்டி, பாலாஜி வேணு கோபால், பிக் எஃப் எம் பாலாஜி, 'லொள்ளு சபா' ஜீவா, சார்லி ஆகியோர் பொருத் தமான தேர்வு.

கிரிக்கெட் வீரராக இருக்கும் விக்ரம் பிரபு ஹாக்கி போட்டியில் ஜெயிப் பது எல்லாம் எந்த லாஜிக்சாரே?  

காலேஜ் கல்ச்சுரல், ஃபிரஷ் ஷர்ஸ் டே நிகழ்ச்சி என்றால் எவ்வ ளவு எனர்ஜி இருக்கும்? ஆனால், இதில் எந்த எனர்ஜியும் இல்லா மல் ஒட்டாமல் கடந்து போகிறது.
 இது என்ன மாயம்... மயக்கவில்லை... முதல் பார்வை !
காதலை மைய மாகக் கொண்டு எடுக்கப்படும் படத்தில் அழுத்த மாக இரு க்க வேண்டிய காட்சிகள் எல்லாம் தேமே என்று நகர் கின்றன.

ரசனை யான அத்தியாயங்கள் கடக்க வேண்டிய இடங்கள் எல்லாம் மெதுவாக... மிக மெதுவாக நகர்ந்து சோத னையை ஏற்படுத் துகின்றன. 

பிக் எஃப் எம் பாலாஜி, அஜய், பாலாஜி வேணு கோபால் டீம் மட்டும் கவுன் டர் வசனம் பேசி சில இடங் களில் சிரிக்க வைக்கி றார்கள்.

நீரவ்ஷா வின் கேமரா கல்லூரிக் கனவு களையும், காதலர்கள் எண்ணங் களையும் வண்ண ங்களாகப் படம் பிடிக்கிறது. 

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் பரவா யில்லை. ஆனால், பின்னணி இசையில் ஜி.வி.பின்னி இருக் கிறார். 

ஆண்டனி பல இடங் களில் கத்தரி போட மறந்து விட்டாரே என்ற எண்ணம் ஏற்படு வதைத் தவிர்க்க முடிய வில்லை. 
விஜய் இயக்கும் படங்களில் காதல், எமோஷன், சென்டிமென்ட் என்று ஏதாவது ஒரு விஷயம் ஆழமாகப் பேசப்படும். ஆனால், இந்தப் படத்தில் காட்சிகள் அழகாக இருக் கிறதே தவிர ஆழம் எதுவும் இல்லை. 

விக்ரம் பிரபு காதலியைப் பிரிவது ஏன் என்பதற்கு எந்த காரணமும் அழுத் தமாக இல்லை. 

வித்தியாசமான ஐடியா என்று உருவாக்கி விட்டு அதை படம் முழுக்க உலவ விடாமல் அதே ஐடியாவில் நொண்டி அடிப்பது தான் படத்தின் பலவீனம். 

மனதில் எந்த மாயமும் செய்யாமல், மேஜிக் இல்லாமல் சாதார ணமாய் முடி கிறது படம்.
Tags:
Privacy and cookie settings