வேறு உலகம் எங்கே இருக்கிறது...? நாசா சொல்கிறது !

மனிதர்கள் வாழும் சூழல் உள்ள பூமியை போன்ற இன்னொரு கிரகத்தை தேடிய பயணத்தை, கெப்லர் செயற்கைக்கோள் மூலம் 2009ம் ஆண்டு துவங்கியது நாசா.
வேறு உலகம் எங்கே இருக்கிறது...? நாசா சொல்கிறது !
சூரிய குடும்பத்தை தாண்டிய மனிதன் வாழும் கோள் பற்றிய ஆராய்ச்சியையும், தனது பயணத்தையும் இதுவரை கெப்லர் செய்து கொண்டே உள்ளது.

'என்றாவது ஒரு நாள் கெப்லர் விண்கலம் நம்மை போன்ற மனிதன் வாழும் ஒரு கிரகத்தை கண்டுபிடித்து, 

அங்குள்ள மனிதன் நம்மோடு வீடியோ கான்ஃப்ரன்ஸில் பேசுவானோ...?' என்ற நம்பிக்கை நமக்கும் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

அதற்கேற்ப நாசா, தனது இணைய தளத்தில் அனைவரும் ஆர்ச்சர்யப்படும் விதமான தகவலை இன்று வெளியிட்டுள்ளது.

தனது நிகழ்வுகள் பக்கத்தில் கெப்லர் டிஸ்கவரிஸை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது. இது இந்திய நேரப்படி 9:30 மணிக்கு வெளியிடும் என அறிவித்துள்ளது.

இதில் பூமியை போன்ற இன்னொரு கிரகத்திற்கான அறிவிப்பு இருக்கும் என்று தெரிகிறது. 

நாசா பூமியின் அளவில் உள்ள பூமியை ஒத்த தட்பவெட்ப நிலையுள்ள ஒரு கிரகத்தைதான் தேடி வருகிறது கெப்லர் விண்கலம்.
இதுவரை 2258 நாட்கள் பயணித்துள்ள கெப்லர், 306604 நட்சத்திரங்களை படம் பிடித்துள்ளது. 4601 கோள்கள் அடையாளம் காணப்பட்டு அதில் 1024 கோள்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இன்று கெப்லர் டிஸ்கவரிஸில் அறிவிக்க இருக்கும் அறிவிப்புக்கான கவுண்டவுன், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

இன்று இரவு 9:30 மணிக்கு நடக்க இருக்கும் நேரடி நிகழ்ச்சியில், நாசாவின் நான்கு விஞ்ஞானிகள் பங்கேற்பார்கள் என நாசா அறிவித்துள்ளது.

நாசாவின் ஜான் க்ரெண்ஃபெல்ட், ஜோன் ஜென்கின்ச், ஜெஃப் காஃபின், டிடியெர் க்வெல்ஸ் ஆகியோரிடம் மீடியாக்கள் மின்னஞ்சல், தொலைபேசி மூலமாகவும்,

ட்விட்டர் பக்கத்தில் #askNASA என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தியும் கேட்கலாம் என்று நாசா அறிவித்துள்ளது. 

இந்த டெலிகான் ஃபரென்ஸின் போது தான், கெப்லர் விண்கலத்தின் கண்டுபிடிப்புகள் பற்றிய அறிவிப்புகளும் வெளியாகும்.

இந்த அறிவிப்பில் பூமியை ஒத்த பண்புடைய இன்னொரு கிரகம் குறித்த தகவலும் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
  
கெப்லர் விண்கலத்தின் தேடுதல் பாதை படம்: 
வேறு உலகம் எங்கே இருக்கிறது...? நாசா சொல்கிறது !
நாசா 1995ம் ஆண்டு சூரியனை போன்ற இன்னொரு சூரியன் கண்டுபிடிக்கப்பட்டது .

21 வருடங்கள் கழிந்த நிலையில் பலரது கனவுகள், ஆராய்ச்சிகள் 1000க்கும் மேற்பட்ட கோள்களை தாண்டி ஒரு கோள் இருக்கும் என்ற நம்பிக்கை அனைவருக்குமே உள்ளது.

பூமியை போன்ற ஒரு பூமி இருந்தால், அவர்களும் நம்மை போன்று இன்னொரு கிரகத்தை தேடிக் கொண்டிருந்தால்,

அவர்கள் என்ன மொழி பேசுவார்களோ, அங்கு எந்த மாதிரியான தொழில்நுட்பம் இருக்குமோ? இந்த கேள்விகள் எல்லாம் உங்களுக்கும் எனக்கும் எழுவது நியாயமே.

பதில் இன்றிரவு கெப்லர் டிஸ்கவரிஸில் என்று நாசா அறிவித்து அதற்கான நேரலை இணைப்பையும் தந்துள்ளது.
 பின் குறிப்பு: 

இது இந்திய நேரப்படி 9:30 மணிக்கு தான் துவங்கும், அதுவரை காத்திருக்கவும்
Tags:
Privacy and cookie settings