காலே டெஸ்டில் உலக சாதனை படைத்த ரஹானே!

டெஸ்ட் போட்டியொன்றில் 8 கேட்ச் பிடித்த முதல் ஃபீல்டர் என்ற பெருமை யை பெற்றுள்ளார் இந்தியாவின் அஜிங்ய ரஹானே. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி காலே நகரில் நடந்துவருகிறது.
 Ajinkya Rahane become the first fielder to take 8 catches in a test match
இந்த போட்டியில் இலங்கை பேட்டிங் செய்யும்போது பெரும்பான்மையான நேரத்தில், ஸ்லிப் பகுதியில் அஜிங்ய ரஹானே ஃபீல்டராக நிறுத்தப்பட்டு ள்ளார். 

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ரஹானே 3 கேட்ச்சுகள் பிடித்த நிலையில், 2வது இன்னிங்சில் 5வது கேட்ச் பிடித்தபோது, அவர் புது சாதனைக்கு சொந்தக்காரராக மாறினார்.

விக்கெட் கீப்பர் தவிர்த்த ஃபீல்டர் ஒருவர் ஒரு டெஸ்ட் போட்டியில் 8 கேட்சுகளை பிடித்தது இதுதான் முதல்முறை. முன்னதாக 5 வீரர்கள் தலா 7 கேட்சுகள் பிடித்திருந்தனர். 

அமித் மிஸ்ரா பந்து வீச்சில் ரங்கனா ஹீரத்தின் கேட்சை ரஹானே பிடித்த போது அது அந்த போட்டியில் அவர் பிடித்த 8வது கேட்சாக அமைந்தது. எனவே இது புதிய சாதனையாகும். அப்போது, 319 ரன்களுக்கு இலங்கை 8வது விக்கெட்டை இழந்திருந்தது. 

ராகுல் டிராவிட் ஓய்வுக்கு பிறகு, ஸ்லிப் பகுதியில் திறமையான ஒரு ஃபீல்டர் இல்லாமல் தடுமாறி வந்த இந்திய அணிக்கு ரஹானேவின் கேட்சுகள் நம்பிக்கைய ளிப்பதாக உள்ளன. 
 
குறிப்பாக, இன்றைய போட்டியின்போது, இலங்கை அணியின் சங்ககாரா கொடுத்த கேட்ச் வாய்ப்பை தாவி பிடித்தவிதம், ஜான்டிரோட்ஸ்சால் கூட பாராட்டப்பட்டது.
Tags:
Privacy and cookie settings