யாரும் தலை சுற்றி கீழே விழுந்து விடவேண்டாம். மார்க்க பிரச்சாரம் செய்யும் சாதாரண அண்ணன் தம்பிகளுக்கே பெரிய, பெரிய சூப்பர் மார்க்கெட் இருக்கும் போது ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாமுக்கு எவ்ளோ....சொத்துஇருக்கணும்?
இதோ அவரது சொத்து விபரத்தை கலாமின் உதவியாளர் பொன்ராஜ் தருகி றார்: கலாம் தன் சம்பாத்தியத்தில் வாங்கிய பெங்களூரு வீடு அவரது காலத் திலேயே விற்கப்பட்டு விட்டது.
தற்போது ராமேசுவரத்தில் உள்ள பூர்வீக வீடு கலாமுக்காக அவரது தந்தை ஜெயினுலாபுதீன் விட்டுச் சென்றது. அந்த வீட்டை அவரது உடன் பிறந்த சகோதரர் முத்து மீரா லெப்பை மரைக்காயர் பொறுப்பில் கலாம் கொடுத்து விட்டார்.
கலாம் உயில் எழுதி வைத்தி ருந்தாரா? அவரது கடைசி காலத்தில் வங்கி இருப்பு எவ்வளவு என்பது குறித்து எனக்கு துல்லியமாகத் தெரியாது. கலாமு க்கு பென்ஷன் பணம் வந்து கொண்டிருந்தது. அப்துல் கலாம் எழுதிய புத்தகங்களுக்கு ராயல்டி வந்து கொண்டிருக்கிறது.
'கலாமுக்கு பரிசாக அளிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள் தான் அவருடைய ஒரே சொத்து.' இந்த புத்தகங்கள் அனைத்தும் டெல்லி ராஜாஜி மார்க் இல்லத்தில் உள்ளன.
கலாம் டெல்லியில் தங்கியிருந்த ராஜாஜி மார்க் இல்லத்தை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் கல்வி மையமாக்க வேண்டும் என்பதே கலாமின் உறவினர்கள், நண்பர்களின் விருப்பமாக உள்ளது.
தான் வாழும் போதே நப்ஷானியத்திற்கு அடிமையாகாமல் தனது திறமையை பணமாக்காமல் தனது குடும்பத்துக்கு ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்க்காமல் அல்லாஹ்வை பயந்து வாழ்ந்து மறைந்த கலாமை
அவரது புற வாழ்வின் செயல்பாடுகளை கொண்டு சொர்க்கம் நரகம் அளவீடு செய்யும் பக்கீர்ஷா கூட்டம் குறை சொல்ல என்ன அருகதை இருக்கிறது?
மர்ஹூம் அப்துல் கலாம் அவர்களின் பிழைகளை அல்லாஹ் மன்னித்து அவருக்கு சுவனத்தின் உயரிய இடமளிக்க நாம் வல்லோனிடம் கையேந்துவோம்.