மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே விபத்தில் படுகாயம் அடைந்த காவலர் மது போதையில் இருந்ததால் சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனை ஊழியர்கள் தவித்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
மாங்குளப்பட்டி நான்கு வழிச்சாலையில், இருசக்கர வாகனத்தில் வந்த தலைமை காவலர் நாகேந்திரன், அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் சிக்கினார்.
படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நாகேந்திரன் மது போதையில் இருந்ததால் சிகிச்சை அளிக்க முடியாமல் செவிலியர் மற்றும் ஊழியர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
எனினும் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு நாகேந்திரனை அனுப்பி வைத்தனர். மது குடிக்காமல் வாகனம் ஓட்ட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார் இது போன்று மது குடித்தும், தலைகவசம் அணியாமலும் சென்றதால்தான் விபத்தில் சிக்கியதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.