மகேஷ் பாபு, விஜய்க்கு செய்தது நியாயமா? விஜய் ரசிகர்கள்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா,சதீஷ் நடிப்பில் சென்ற வருட தீபாவளி அன்று வெளியாகி 100 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்த படம் ‘கத்தி’.
படத்தின் கதைப்படி ஒரு குளிர்பான கம்பெனி கட்டுவதற்காக விவசாய நிலத்தை அபகரிக்கும் முயற்சி நடக்கும்.

அதை விஜய் போராடித் தடுப்பார். இதுதான் படத்தின் கரு. இதே பாணியில் தான் சமீபத்தில் வெளியான செல்வந்தன், தெலுங்கில் ஸ்ரீமந்துடு படமாக வெளியாகியுள்ளது.

விவசாயம், ஊரில் தண்ணீர் பிரச்னை. ஊருக்காக தன் நலத்தைக் கூட பொருட்படுத்தாத ஹீரோ இடையில் செருகப்பட்ட குளிர்பான கம்பெனி விவகாரம் என இந்தப் படத்தின் கதையும் ஓரளவு ‘கத்தி’ படத்தின் கதைதான்.

ஏற்கனவே ‘கத்தி’ படத்தின் ரீமேக் உரிமையை தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது. இந்தப் படத்தின் ரீமேக்கில் நடிக்க முதன்முதலில் மகேஷ் பாபுவிற்குதான் கதை சொல்லப்பட்டது.

நான் ரீமேக் படங்களில் நடிப்பதில்லை எனக் கூறி மறுத்தார். அதனைத் தொடர்ந்து பவன் கல்யாணிடம் பேசப்பட்டது அவரும் மறுக்கவே இப்போது படம் காத்திருப்பில் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான ‘செல்வந்தன்’ படம் ‘கத்தி’ படத்தின் கதையை ஒத்திருக்கும் பட்சத்தில் பின்னர் ஏன் ‘கத்தி’ ரீமேக்கிற்கு மகேஷ் பாபு சம்மதிக்கவில்லை என கேள்விகள் எழுந்துள்ளன.

மேலும் ’கத்தி’ படத்தின் கதையைக் கேட்டு அதிலிருந்து கதையை உருவி இந்த ‘செல்வந்தன்’ படத்தின் கதையை உருவாக்கி விட்டனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இனி இந்த செல்வந்தன் வெளியானதால் அதே மாதிரியான கதையை மீண்டும் தெலுங்கில் எடுக்க முடியுமா. ரீமேக் உரிமையை வாங்கிய தயாரிப்பாளரின் நிலைதான் என்ன? இனி எந்த ஹீரோ நடிப்பார் இப்படி பல குழப்பங்கள் உருவாகியுள்ளன.
Tags:
Privacy and cookie settings