ஆஸ்கர் நிறுவனம் ஒரு படம் தயாரிக்க இருக்கிறது, நீங்கள் நாயகியாக நடிக்க வேண்டும் என்று அணுகினால் "முடியவே முடியாது" என்று கூறிவிடுகி றாராம். அதற்கு ஒரு காரணம் இருக்கிறதாம்.
2003ம் ஆண்டு ஸ்ரீகாந்த், த்ரிஷா நடிக்க ஆஸ்கர் நிறுவனம் தயாரிப்பில் வெளி யான படம் 'மனசெல்லாம்'. சந்தோஷ் இயக்கத்தில் வெளியான இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்து இருந்தார்.
இப்படத்துக்கு முதலில் புதுமுகம் யாரையாவது நாயகியாக போடலாம் என்று முடிவு செய்த போது ஒப்பந்தமானவர் வித்யா பாலன்.
வித்யா பாலன் நடித்த காட்சிகளை ஒளிப்பதிவு செய்தவர் இயக்குநர் 'வீரம்' சி வா. ஒரு வாரம் படப்பிடிப்பு முடிந்தவுடன், எடுத்தவரை உள்ள காட்சிகளை எ டிட் செய்து பார்த்தார்கள். அது திருப்தியாக வரவில்லையாம். அப்போது வடப ழனியில் உள்ள ஆதித்யா ஹோட்டலில் தான் அறையில் தங்கியிருந்தார்.
'மனசெல்லாம்' படத்தில் இருந்து வித்யா பாலனை நீக்கியவுடன், ஓட்டல் அ றைக்கு வாடகை உள்ளிட்டவற்றை கொடுத்தால் மட்டுமே அறையில் இருந்து வித்யா பாலன் கிளம்ப முடியும்.
சில நாட்கள் கேட்டு பார்த்துவிட்டு, இறுதியா க தன்னிடம் இருந்த நகைகளை விற்று மும்பை கிளம்பிவிட்டாராம். மும்பையில் முன்னணி நாயகியாக வலம் வர ஆரம்பித்து புகழின் உச்சிக்குச் சென்றார்.
அப்போது இதே ஆஸ்கர் நிறுவனம் ஒரு படம் தயாரிக்கிறோம், பிர ம்மாண்ட பட்ஜெட், முன்னணி நாயகன் என்றெல்லாம் சொல்லிப் பார்த்ததாம். முடியவே முடியாது நீங்கள் கிளம்பலாம் என்று அனுப்பிவிட்டாராம்.
அவ்வாறு வித்யா பாலன் கூறி நிராகரித்த படத்தின் பெயர் 'தசாவதாரம்' என்பது உள்வட்டத் தகவல்.