பேஸ்புக்கில் புதிய பயனுள்ள வசதி INTERESTS உபயோகிப்பது எப்படி?

உலகம் முழுவதும் 800 மில்லியனுக்கும் அதிகமான வாசகர்களை கொண்ட ஒரே சமூக இணையதளம் பேஸ்புக் ஆகும். 
பேஸ்புக்கில் புதிய பயனுள்ள வசதி INTERESTS உபயோகிப்பது எப்படி?
சமூக இனியதலங்களுக்கு இடையே நடைபெறும் போட்டியில் பேஸ்புக் யாரும் தொட முடியாத இடத்தில் உள்ளது.

பேஸ்புக் உச்சத்தில் இருந்தாலும் அதன் வாசகர்களை கவர அடிக்கடி ஏதாவது ஒரு வசதியை அப்டேட் செய்து கொண்டே உள்ளது.

அந்த வகையில் இப்பொழுது பேஸ்புக்கில் Interest என்ற புதிய வசதியை அறிமுகபடுத்தியுள்ளது.

Interest வசதியை பயன்படுத்துவது எப்படி:

பேஸ்புக்கில் நிறைய நபர்களிடம் நண்பர்களாக இருந்தாலும் ஒரு சில பேர் பகிர்வது உங்களுக்கு மிகவும் பிடித்து பிடித்து இருக்கும்.
அப்படி உங்களுக்கு பிடித்த நபர்களின் பகிர்வுகளை மட்டும் தனியாக பார்க்க உதவுவது தான் இந்த interest வசதி.

முதலில் உங்கள் பேஸ்புக் தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் இடது பக்கத்தில் கீழ் பகுதியில் Interest என்ற புதிய வசதி இருப்பதை காண்பீர்கள்

அதன் மீது க்ளிக் செய்யவும். அடுத்த விண்டோ ஓபன் ஆகும் அதில் CREATE LIST என்ற பட்டனை அழுத்தவும்.

அடுத்து ஒரு Pop-up விண்டோ ஓபன் ஆகும் அதில் நீங்கள் பின்தொடரும் பக்கங்கள், நண்பர்கள், Subscribe செய்யும் பட்டியல் இருக்கும் காணப்படும்.

அதில் உங்களுக்கு பிடித்த நபர்களை மட்டும் தேர்வு செய்து கொள்ளவும்.
உங்களுக்கு பிடித்த நண்பர்களை தேர்வு செய்தவுடன் கீழே உள்ள Next என்ற பட்டனை அழுத்தவும். அடுத்த விண்டோ ஓபன் ஆகும். 

அதில் உங்களுக்கு பிடித்த தலைப்பை கொடுத்து உங்கள் பட்டியல் யாருக்கு தெரிய வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.

அடுத்து கீழே உள்ள Done என்பதை க்ளிக் செய்தால் போதும் தேர்வு செய்தவர்களின் பதிவுகள் மட்டும் இனி தனியாக பார்த்து கொள்ளலாம்.

இதே போன்று தொழில்நுட்பம், அரசியல், அனுபவம் இப்படி உங்களுக்கு பிடித்த நண்பர்களை தனியாக பட்டியலிட்டு கொள்ளலாம்.
Tags:
Privacy and cookie settings