25 ஆண்டுகளில் 80 பத்திரிகையாளர்கள் கொலை !

கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவில் கொல்லப் பட்ட பத்திரிகை யாளர்கள் எண்ணிக்கை 80 என உள்ளது. இதில், ஒன்றை தவிர மற்ற அனைத்து வழக்கு களும் நிலுவையில் இருப்பதாக
25 ஆண்டுகளில் 80 பத்திரிகையாளர்கள் கொலை !
பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா நேற்று உச்ச நீதிமன்ற த்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறி யுள்ளது.

இதை தாக்கல் செய்த கவுன்சில், வியன்னாவை சேர்ந்த பன்னாட்டு பத்திரிகை யாளர்கள் ஆய்வு நிறுவனம் ஒன்று ‘மரணப் பட்டியல்’ என்ற பெயரில் வெளியி ட்ட அறிக்கையை கோடிட்டுக் காட்டி யுள்ளது. 

அதில், உலகில் பத்திரிகை யாளர்கள் தாக்கப்படும் நாடுகளில் இந்தியா ஒன்ப தாவது இடத்தில் இருப்பதாகவும், கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 80 பத்திரிகை யாளர்கள் இந்தியாவில் கொல்லப் பட்டிருப்ப தாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது. 

இவற்றில் ஒன்றை தவிர மற்ற அனைத்து வழக்கு களும் நீதிமன்ற விசாரணை அல்லது குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப் பட்டாத நிலையில் உள்ள தாகவும் தகவல் அளிக்கப் பட்டுள்ளது. 

கடந்த 2013-ல் மும்பையின் சக்தி மில்லில் பெண் பத்திரிகை யாளர் பாலியல் வல்லுற விற்கு உள்ளாக்கப் பட்டார். 
இந்த ஒரு வழக்கில் மட்டும் விரைவு நீதிமன்ற த்தால் விசாரணை ஒரு வருடத் தில் முடிக்கப்ப ட்டு குற்றவாளி களுக்கு தண்டணை அளிக்கப் பட்டுள்ள தாகவும் அந்த அறிக்கை யில் கூறப்பட் டுள்ளது. 

பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா சார்பில் அமைக்கப் பட்ட உண்மை அறியும் உயரிய குழு 11 மாநிலங்கள் பயணம் செய்து அளித்த அறிக்கையும் உச்ச நீதிமன்ற த்தின் பதில் மனுவில் இணைக்கப் பட்டுள்ளது. 

இதில், அம் மாநில அரசுகள்  மற்றும் மாவட்ட நிர்வா கங்கள் பத்திரிகையா ளர்கள் மீதான தாக்குத ல்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்த கவனமும் செலுத்துவ தில்லை என்று குறிப்பிடப் பட்டுள்ளது. 

இதுவரை வெறும் 6.7 சதவிகித வழக்குகளில் மட்டுமே பத்திரிகை யாளர்களை தாக்கிய வர்கள் மீது விசாரணை நடத்தப் பட்டு குற்றவாளி களுக்கு தண்டனை வழங்கப் பட்டுள்ள தாக அக்குழுவின் அறிக்கை யில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 
 25 ஆண்டுகளில் 80 பத்திரிகையாளர்கள் கொலை !
உபியில் கடந்த ஜூன் 8-ல் எரித்து கொல்லப்பட்ட பத்திரிகை யாளரான ஜகேந் திரா சிங் வழக்கை சிபிஐ விசாரிக்க கேட்டும் நாடு முழுவது மான பத்திரிகை யாளர்க ளுக்கு பாதுகாப்பு கோரியும்

சத்திஷ் ஜெயின் என்ற பத்திரிகை யாளர் கடந்த ஜூன் மாதம் உச்ச நீதிமன்ற த்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தி ருந்தார். 

இதை விசாரணை க்கு ஏற்ற உச்ச நீதிமன்ற அமர்வு, மத்திய அரசு, உபி அரசு மற்றும் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா விடம் பதில் கேட்டு நோட்டீஸ் அளித் திருந்தது. 

இதற்கு உச்ச நீதிமன்றத்தின் முன் நேற்று அளித்த தன் பதிலில் பிரஸ் கவுன்சில், ஊழல் போன்ற அநியாங் களை சமூக த்தின் முன்

முதலில் வெளிக் கொண்டு வருபவர் களுக்கு உள்ள சமூக ஆர்வல ர்கள் பாதுகாப்பு சட்டப்படி பத்திரிகை யாளர்களு க்கும் பாதுகாப்பு அளிக்கு ம்படி கோரி யுள்ளது .
Tags:
Privacy and cookie settings