இந்தியாவுடன் அமைதியை விரும்புகிறோம்.. மம்னூன் ஹுசைன் !

பாகிஸ்தானில் நேற்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவுடன் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புவதாக அந்நாட்டு அதிபர் மம்னூன் ஹுசைன் கூறியுள்ளார். 
ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்தபோது இந்தியாவுக்கு ஒருநாள் முன்னதாக பாகிஸ்தானுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.

அதன்படி நேற்று அந்நாட்டில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இஸ்லாமா பாதில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சியில் பாகிஸ்தான் அதிபர் மம்னூ ன் ஹுசைன் தலைமை வகித்தார். 

பிரதமர் நவாஸ் ஷெரீப் தேசிய கொடி ஏற்றி வைத்தார். நாட்டின் வளர்ச்சிக்கா கவும், அமைதிக்காக வும் தொழுகை நடத்தப்பட்டது. முப்படை தளபதிகள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதில் உரையாற்றிய பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹுசைன் கூறியது: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடன் அமைதி நிலவ வேண்டு மென்று பாகிஸ்தான் விரும்புகிறது. 

அதே நேரத்தில் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதை பொறுத்துக் கொள்ள மாட்டோம். இந்தியாவுடனான எல்லையில் அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறுகின்றன. இது பாகிஸ்தானுக்கு கோபமூட்டும் நடவடிக்கையாக உள்ளது. 
பாகிஸ்தானின் அமைதியை கெடுக்கும் வகையில் அண்டை நாடுகள் சதி செய்து நமது நாட்டில் தீவிரவாதத்தை தூண்டி விடுகின் றன. 

தீவிரவாதிகள் விஷயத்தில் பாகிஸ்தான் மிகக் கடுமையாக நடந்து கொள்ளும் என்றார். பாகிஸ்தான் மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி சுதந்திரதின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings