மணிப்பூரில் கனமழையால் நிலச்சரிவு: 21 பேர் பலி !

மணிப்பூரில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தோ- திபெத் எல்லைப்பகுதியை ஒட்டிய கென்ஜாய் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
 
இதனால் மலைப்பகுதியான இப்பகுதியில் இன்று மாலை சுமார் 5 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் 21 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் கென்ஜாய் மாவட்டத்தை இணைக்கும் பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, நிலச்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே மணிப்பூரின் பல பகுதிகளில் கடந்த இரு தினங்களாகவே கனமழை கொட்டி வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனைத்தொடர்ந்து கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் இருந்து மிசோரம், திரிபுரா ஆகிய பகுதிகளை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையும் வெள்ளத்தால் மூடப்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings