அன்ஸாரிகளில் ஒருவரின் (ஜனாஸா) இறுதிக் கடனை நிறைவேற்று வதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் புறப்பட்டு, அடக்கத்தல த்திற்குப் போய்ச் சேர்ந்தோம்.
அங்குக் குழிதோண்டி முடிக்கப் பட வில்லை. எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்தார்கள்.
நாங்களும் அவர்களைச் சுற்றி, எங்களின் தலைகள் மீது பறவை இருந்ததைப் போன்று (அசையாமல்) அமர்ந்தி ருந்தோம்.
நபி (ஸல்) அவர்களின் கையில் குச்சி யொன்று இருந்தது. அதைக் கொண்டு அவர்கள் தரையில் குத்திக் கொண்டிருந் தார்கள்.
பின்னர், தமது தலையை உயர்த்தி, "அடக்கத் தலத்தின் (கப்ரின்) வேதனை யிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்" என்று இரண்டு அல்லது மூன்று தடவை கூறி விட்டுத் தொடர்ந்து கூறலானார்கள்:
"இறைநம்பிக்கை கொண்ட அடியார் இவ்வுலகத்தி லிருந்து விடைபெற்று, மறுமையை நோக்கிச் செல்லும் நிலையில் இருந்தால், வானவர்கள் சிலர் வானத்தி லிருந்து இறங்கி அவர்களிடம் வருவர்.
அவர்களின் முகங்கள் வெண்மை யாக இருக்கும். அவை சூரியனைப் போன்று ஒளிரும்.
அவர்களுடன் சொர்க்கத்தின் கஃபன் (பிரேத) ஆடைகளில் ஓர் ஆடையும் சொர்க்கத்தின் வாசனைத் திரவியங்களில் ஒன்றும் இருக்கும்.
இறுதியில், அவரது பார்வை எட்டும் தூரத்தில் அவர்கள் வந்து அமர்வார்கள். பின்னர் உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவரது தலைக்கு அருகில் அமர்வார்.
அவர், 'தூய்மையான உயிரே! அல்லாஹ்வின் மன்னிப்பையும் அன்பையும் நோக்கி நீ புறப்படு வாயாக' என்பார்.
அப்போது தண்ணீர்ப் பையின் வாயிலிருந்து நீர் வழிவதைப் போன்று (அவரது உடலிலிருந்து) உயிர் வெளியேறும். உடனே அதை அந்த வானவர் எடுத்துக் கொள்வார்.
அவர் எடுத்ததும் கண்ணி மைக்கும் நேரம்கூட அந்த உயிரை அவரது கையில் மற்ற வானவர்கள் விட்டு வைக்க மாட்டார்கள்.
நெஞ்சு வலியை குணமாக்கும் ஆரஞ்சு !
இறுதியில் அதை அவர்கள் வாங்கிக் கொண்டு (தாம் கொண்டு வந்த) பிரேதத் துணியில் வைத்து அந்த வாசனைத் திரவியத்தைப் பூசுவார்கள்.
பூமியின் மேற்பரப்பில் கிடைக்கும் கஸ்தூரியின் உயர் தரமான நறுமணத்தைப் போன்ற தொரு நறுமணம் அதிலிருந்து வெளிவரும். பின்னர் அந்த உயிருடன் வானவர்கள் மேலே ஏறுவார்கள்.
அவர்கள் அந்த உயிரை எடுத்துக் கொண்டு வானவர்களின் ஒரு கூட்டாத் தாரைக் கடந்து செல்லும் போதெல்லாம் அந்தக் கூட்டத்தார், 'இந்தத் தூய உயிர் யாருடையது?' என்று கேட்பர்.
அதற்கு அவர்கள், 'இன்னாரின் மகன் இன்னார்' என்று அவருக்கு மக்கள் உலகத்தில் சூட்டியிருந்த பெயர்களில் அழகான பெயரைக் குறிப்பிடு வார்கள்.
இறுதியில் அந்த உயிருடன் பூமியின் (அருகி லிருக்கும் முதல்) வானத்தை வானவர்கள் அடைவார்கள். அவருக்காக அந்த வானத்தைத் திறக்கக் கோருவார்கள்.
அவருக்காக அது திறக்கப்படும். ஒவ்வொரு வானத்தி லிருக்கும் இறை நெருக்கம் பெற்ற வானவர்கள் அந்த வானத்தி லிருந்து அடுத்த வானம் வரை அவரைப் பின் தொடர்ந்து செல்வார்கள்.
இறுதியில் அவர் ஏழாவது வானத்திற்குக் கொண்டு செல்லப் படுவார். அப்போது வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ்,
'என் அடியானின் (வினைப்) பதிவேட்டை (நல்லோர்களின் வினைகள் பதிவு செய்யப்பட்ட) இல்லிய்யூன் எனும் பேரேட்டில் பதிவு செய்யுங்கள்.
அவரை மறுபடியும் மண்ணுக்கே அனுப்புங்கள், ஏனெனில் அதிலிருந்தே அவர்களை (மனிதர்களை)ப் படைத்தேன்;
அதற்கே அவர்களை நான் திருப்பி அனுப்புவேன். (பின்னர்) மற்றொரு முறை அதிலிருந்தே அவர்களை நான் வெளி யாக்குவேன்' என்று கூறுவான்.
பின்னர் அவரது உயிர் (மண்ணறை யிலுள்ள) அவரது உடலில் திருப்பிச் செலுத்தப் படும்.
அவரிடம் இரண்டு வானவர்கள் வந்து அவரை (எழுப்பி) அமரவைப்பர். அவ்விருவரும் அவரிடம், 'உம்முடைய இறைவன் யார்?' என்று கேட்பர்.
அதற்கு, 'என் இறைவன் அல்லாஹ்' என்று அவர் பதிலளிப்பார். அடுத்து, 'உமது மார்க்கம் எது?' என்று அவ்விருவரும் அவரிடம் கேட்பர். 'எனது மார்க்கம் இஸ்லாம்' என்று அவர் கூறுவார்.
பிறகு 'உங்களிடையே அனுப்பப்பட்ட இன்னார் யார்?' என்று (என்னைப் பற்றி) அவ்விருவரும் அவரிடம் கேட்பர். 'அவர் அல்லாஹ்வின் தூதர்' என்று அவர் பதிலளிப்பார்.
அவ்விருவரும் 'அது எப்படி உமக்குத் தெரியும்?' என்று அவரிடம் கேட்பார்கள். அதற்கு அவர், 'நான் அல்லாஹ்வின் வேதம் (குர்ஆனைப்) படித்தேன்;
அதன் மீது நம்பிக்கை கொண்டேன்; உண்மையென ஏற்றேன்' என்று கூறுவார். உடனே வானிலிருந்து, 'என் அடியார் உண்மை உரைத்தார்.
எனவே அவருக்குச் சொர்க்கத்தி (ன் விரிப்புகளி) லிருந்து (ஒரு விரிப்பை) விரித்துக் கொடுங்கள். சொர்க்க ஆடைகளில் ஒன்றை அணிவியுங்கள்,
அவருக்காகச் சொர்க்க வாசல் ஒன்றைத் திறந்து விடுங்கள்' என்று அறிவிப்பு வரும். (அவ்வாறே ஏற்பாடுகள் செய்யப்படும்)
அந்த வாசல் வழியாகச் சொர்க்கத்தின் நறுமணமும் வாசனையும் அவரிடம் வரும். பார்வை எட்டும் தூரம்வரை அவருக்கு அவரது அடக்கத்தலம் விரிவுபடுத்தப்படும்.
பின்னர் பொலிவான முகமும் அழகான ஆடையும் நல்ல நறுமணமும் கொண்ட ஒருவர் அவரிடம் வந்து, 'உமக்கு மகிழ்ச்சி தரும் நற்செய்தி யொன்றை (ச் சொல்கிறேன்) கேளும்;
இதுதான் உமக்கு வாக்களிக் கப்பட்ட நாள் ஆகும்' என்பார். அப்போது அவர், அந்த அழகானவரிடம் 'நீர் யார்? உமது முகம் நன்மையைக் கொண்டு வரும் முகமாக உள்ளதே' என்று கேட்பார்.
அதற்கு அந்த அழகர், 'நான்தான் நீர் செய்த நற்செயல்கள்' என்பார். உடனே அவர் 'என் இறைவா! யுக முடிவு (நாளை இப்போதே) ஏற்படுத்து வாயாக;
நான் என் குடும்பத் தாரிடமும் செல்வத்திடமும் மறுபடியும் போய்ச்சேர வேண்டும்' என்று கூறுவார்.
(ஏக இறைவனை) மறுதலித்த அடியார் ஒருவர் இவ்வுலகத் திலிருந்து விடை பெற்று மறுமையை நோக்கிச் செல்லும் நிலையில் இருந்தால்,
வானவர்களில் சிலர் வானிலிருந்து இறங்கி அவரிடம் வருவர். அவர்களின் முகங்கள் கருப்பாக இருக்கும்.
அவர்களுடன் முடியாலான (முரட்டு கஃபன்) ஆடை ஒன்று இருக்கும். அவர்கள் அவரது பார்வை எட்டும் தூரத்தில் வந்து அமர்ந்து கொள்வார்கள்.
பின்னர் உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவரது தலைக்கு அருகில் அமர்வார். 'மாசடைந்த ஆன்மாவே! அல்லாஹ்வின் வெறுப்பையும் சினத்தையும் நோக்கிப் புறப்படு' என்பார். அப்போது அவரது உடல் தளர்த்தப் படும்.
பின்னர் ஈரக் கம்பளியில் சிக்கிக் கொண்ட முள்ளை இழுப்பதைப் போன்று அவரது உடலிலிருந்து உயிரைப் பிடித்து இழுத்துப் பறிப்பார்.
உயிரைப் பறிக்கும் வானவர் அந்த உயிரைக் கைப்பற்றி யதும் கண்ணி மைக்கும் நேரம்கூட அதை அவரது கையில் அந்த வானவர்கள் விட்டு வைக்க மாட்டார்கள்.
உடனே அதை அவர்கள் பெற்று (தாம் கொண்டு வந்திருக்கும்) முடியாலான அந்த (முரட்டுக் கஃபன்) ஆடையில் வைப்பார்கள்.
அப்போது ஒரு பிணத்தின் மேற்பரப்பி லிருந்து வீசும் மிக மோசமான துர்வாடையைப் போன்று அதிலிருந்து துர்நாற்றம் வெளிவரும்.
பின்னர் அந்த உயிருடன் வானவர்கள் மேலே ஏறுவார்கள். அவர்கள் அந்த உயிரை எடுத்துக் கொண்டு வானவர்களின் ஒரு கூட்டத்தைக் கடந்து செல்லும்போ தெல்லாம் அந்தக் கூட்டத்தார், 'இந்த மாசடைந்த உயிர் யாருடையது?' என்று கேட்பர்.
அதற்கு அவர்கள், 'இன்னார் மகன் இன்னா ருடையது' என்று அவருக்கு மக்கள் உலகத்தில் சூட்டி யிருந்த பெயர்களில் அருவருப்பான பெயரைக் குறிப்பிடு வார்கள்.
இறுதியில் அந்த உயிருடன் பூமியின் (அருகிலிருக்கும் முதல்) வானத்திற்குப் போய்ச்சேர்வார்கள். அவருக்காக அந்த வானத்தைத் திறக்கக் கோருவார்கள்.
ஆனால் அவருக்காக வானம் திறக்கப் படாது" இவ்வாறு கூறிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
''அவர்களுக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்படா. ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்'' எனும் (7:40) வசனத்தை ஓதினார்கள்.
தொடர்ந்து, "பின்னர் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், 'அவனது (வினைப்) பதிவேட்டை ஆகக் கீழ்நிலையில் உள்ள ஸிஜ்ஜீன் எனும் பேரேட்டில் பதிவு செய்யுங்கள்' என்று கூறுவான்.
உடனே அவரது உயிர் வேகமாக வீசியெறிப்படும்" இவ்வாறு கூறிய நபி (ஸல்) அவர்கள், '...
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர், வானத்தி லிருந்து தரைவியில் விழுந்து, பறவைகள் அவரை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது
பெருங் காற்றடித்து, வெகு தொலை விலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகி விடுவார்"
(அல்குர்ஆன் 22:31) எனும் வசனத்தை ஓதினார்கள். தொடர்ந்து, "பின்னர் அவரது உயிர் (பூமியிலுள்ள) அவரது உடலில் திருப்பிச் செலுத்தப்படும்.
அவரிடம் இரு வானவர்கள் வந்து அவரை எழுப்பி அமர வைப்பர். பின்னர் அவரிடம், 'உன்னுடைய இறைவன் யார்?' என்று கேட்பர். அதற்கு அவர் 'அந்தோ! எனக்கு எதுவும் தெரியாதே!' என்று கூறுவார்.
அவ்விருவரும், 'உனது மார்க்கம் எது?' என்று கேட்பர். அவர், 'அந்தோ! எனக்கு எதுவும் தெரியாதே!' என்பார்.
அடுத்து 'உங்களிடையே அனுப்பப் பட்டிருந்த இன்னார் யார்?' என்று (என்னைப் பற்றி) அவ்விருவரும் கேட்பர்.
அப்போதும் அவர், 'அந்தோ! எனக்கொன்றுமே தெரியாதே!' என்று பதிலளிப்பார். அப்போது வானத்திலிருந்து, 'என் அடியான் பொய்யுரைத்து விட்டான்.
எனவே, அவனுக்கு நரகத்தின் விரிப்புகளி லிருந்து (ஒரு விரிப்பை) விரித்துக் கொடுங்கள்;
அவனுக்காக நரக வாசல் ஒன்றைத் திறந்து விடுங்கள்' என்று அறிவிப்பு வரும். நரகத்தின் வெப்பமும் கடும் அனலும் அவரிடம் வரும். அவரை அவரது மண்ணறை (யின் இரு பக்கமும்) நெருக்கும்.
அதனால் அவரது விலா எலும்புகள் இடம் மாறும். அவரிடம் அவலட்சணமான முகமும் அருவருப்பான உடையும் துர்வாடையும் உள்ள ஒருவர் வந்து, 'உனக்கு வருத்த மளிக்கும் செய்தி செய்தி யொன்றைச் சொல்கிறேன் கேள்;
இதுதான் உமக்கு வாக்களிக் கப்பட்ட நாள் ஆகும்' என்பார். அப்போது அவர், அந்த அவலட்சண மானவரிடம் 'நீர் யார்?
உமது முகம் தீமையைக் கொண்டு வரும் முகமாக உள்ளதே!' என்று கேட்பார் அதற்கவர், 'நான்தான் நீ செய்த தீய செயல்கள்' என்பார்.
உடனே அந்த இறைமறுப்பாளர், 'என் இறைவா! யுக முடிவு நாளை (இப்போது) ஏற்படுத்தி விடாதே' என்று கதறுவார்" என்று நபி (ஸல்) விளக்கினார்கள்.
அறிவிப்பவர் பராவு பின் ஆஸிப் (ரலி) (நூல்கள் - அஹ்மத் 18063, அபூதாவூத் 4753).
யா அல்லாஹ் கப்ரின் வேதனை மறுமையின் சோதனை நரக வேதனையில் இருந்து எங்களை காப்பாத்து வாயாக அல்லாஹுவும் ரசூலும் காட்டி தந்த வழியில் நடந்து
இம்மை மறுமை வெற்றி யாளர்களாக என்னையும் உங்களையும் அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக!