இந்த பத்ரு போரில் ஒரு முக்கியமான நிகழ்வுகள் நடந்தன. அவைகள், தந்தை தன் பிள்ளைக்கு எதிராகவும், பிள்ளை தந்தைக்கு எதிராகவும், சகோதரர்கள் தங் கள் சகோதரர்களுக்கு எதிராகவும் போரிட்டனர்.
அதாவது இரு பிரிவாக போரிட்டனர் இறை நம்பிக்கையாளர்கள் – இறை மறுப்பாளர்கள்!
இதனை பற்றி கொஞ்சம் பார்ப்போம்!
அதாவது இரு பிரிவாக போரிட்டனர் இறை நம்பிக்கையாளர்கள் – இறை மறுப்பாளர்கள்!
இதனை பற்றி கொஞ்சம் பார்ப்போம்!
பிலால்(ரலி) அவர்களுக்கு மக்காவில் மிகுந்த வேதனையளித்தவன் உமையா, இவரையும், இவரது மகனையும் கைதியாக அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) இழுத்து வந்த போது,
உமையாவை கண்ட பிலால்(ரலி) அவர்கள், “இவன் என்னை அதிகம் துன்பப்படித்தியவன்” என்று கூறினார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் எவ்வளவோ தடுக்க முயன்றும், நபித்தோழர்களால், உமையா கொல்லப்பட்டான்.
உமையா கொல்லப் படுவதற்கு முன்பாக கேட்டான், “தீக்கோழியின் இறகுகளை தன் நெஞ்சில் செருகி இருக்கும் அந்த மனிதர் யார்”? என்று கேட்டான், அதற்கு, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் கூறினார்கள், “அவர்தான் ஹம்ஜா” என்று, அதற்கு அவன் கூறினான்,
“அவர்தான் போரில் எங்களுக்கு மிகுந்த சேதத்தை உண்டாக்கியவர்” என்றான்.
முஸ்அப் இப்னு உமைர்(ரலி) அவர்கள் தனது சகோதரர் அபூஅஜீஸ் உப்னு உமைரை பார்த்தார்கள் “இவனை கைதியா பிடியுங்கள்” என்று கூறினார்கள்.
முஸ்அப் இப்னு உமைர்(ரலி) அவர்கள் தனது சகோதரர் அபூஅஜீஸ் உப்னு உமைரை பார்த்தார்கள் “இவனை கைதியா பிடியுங்கள்” என்று கூறினார்கள்.
அபுபக்ர்(ரலி), குரைஷிகளின் கூட்டத்தில் இருந்த தனது மகன் அப்துர் ரஹ்மானை பார்த்து, “ஏ… கெட்டவனே! எனது செல்வங்கள் எங்கே”? என்று கேட்டார்கள். “அதற்கு அவர்,குதிரையும், வாளையும் தவிர வேறொன்றும் இல்லை”என்றார்.
மக்காவில் தங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கி, கொடுமை படுத்தியவர்களை கொன்று தங்கள் கோபத்தை தணித்துக் கொண்டனர்.
சிலர் கெஞ்சினார்கள், தன்னிடம் உள்ள அனைத்து ஒட்டகங்களையும் தந்து விடுகிறேன், என்னை கைதியாக பிடித்துக் கொள், கொன்று விடாதே” என்றார்கள். சிலர் கொல்லப்பட்டனர், பலர் கைதியாக பிடிக்கப் பட்டனர்.
உமர்(ரலி) அவர்களை பற்றி கூறவேண்டும்.
உமர்(ரலி) அவர்களை பற்றி கூறவேண்டும்.
பத்ரு போர் நடந்தபோது நபி(ஸல்) அவர்களின் வலப் பக்கம் நின்று போர் புரிந்தார்கள். தனது தாய் மாமன் என்று கூட பாராமல் ஆஸ் இப்னு ஹிஷாம் இப்னு முகீராவை கொன்றார்கள். இந்த போரில் முதன் முதலில் முஸ்லிம்கள் தரப்பில் ஷஹீதான பெருமைக்குரியவர் உமர்(ரலி) அவர்களின் அடிமையான மஹ்ஜா(ரலி) அவர்கள்.
இந்த போரில் மக்கத்து இறைநிராகரிப்பாளர்களுக்கு ஆதரவாக, குரைஷி குலத்தவரின் அனைத்து கிளையினரும் வந்த போது பனூ அதி குலத்தை சார்ந்த எவரும் குரைஷிகளின் சார்பாக கலந்து கொள்ளவில்லை. காரணம், உமர்(ரலி) அவர்கள் இந்த குலத்தை சார்ந்தவர்கள்.
அதே வேளயில், இந்த குலத்தை சார்ந்தவர்கள் பெரும்பாலோனோர் இஸ்லாத்தை தழுவி இருந்ததால், அவர்களில் பெரும்பா லோனோர் முஸ்லிம்கள் தரப்பில் போர் புரிய வந்து இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்த க்கது.
கைதியாக பிடிபட்டு இருந்த அப்பாஸ் அவர்களை பார்த்து, “அப்பாஸே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனது தந்தை கத்தாப் முஸ்லிமாகுவதை விட நீங்கள் முஸ்லிம் ஆகுவது தன் எனக்கு விருப்பமானது, அதற்கு காரணம் நீங்கள் முஸ்லிமாவது எனக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்” என்று கூறினார்கள்.
போரில் கொல்லப்பட்ட 24 முக்கிய குரைஷி தலைவர்களின் சடலங்களை இழுத்து வரும்படி கூறினார்கள். அவைகள் நாற்றம் பிடித்த கிணற்றில் தூக்கி எறியப்பட்டன.
இஸ்லாமியர்கள் தரப்பில் கொல்லப்பட்டு ஷஹீதானவர்கள் விபரம். 3:13. (பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது; ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது;
பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது; நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர்;
இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்; நிச்சயமாக, (அகப்) பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது.
3:123. “பத்ரு” போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்; ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
இஸ்லாமியர்கள் தரப்பில் கொல்லப்பட்டு ஷஹீதானவர்கள் விபரம்.
01. உமைர் இப்னு அபீ வக்காஸ் (ரலி)
02. ஸஃப்வான் இப்னு வஹப்(ரலி)
03. துஷ்ஷம்மாஃ இப்னு அப்து அம்ர்(ரலி)
04 .முஸஜ்ஜஃ இப்ன ஸாலிஹ்(ரலி)
05.ஆகில் இப்னுல் பக்ரு(ரலி)
06.உபைதா இப்னுல் ஹாரித் இப்னு அப்துல் முத்தலிப்(ரலி)
(இவர்கள் அனைவரும் முஹாஜிர்கள்)
07.உமைர் இப்னுல் ஹம்மாம்(ரலி)
08 .யஸீது இப்னுல் ஹாரித் இப்னு கைஸ்(ரலி)
09 .அவ்ஃப் இப்னு ஹாரித் இப்னு ரிஃபாஆ (ரலி)
10 .மஸ்வூது இப்னு ஹாரித் இப்னு ரிஃபாஆ(ரலி)
11 .மஸ்அத் இப்னு ஹத்மா(ரலி)
12 .முபஷ்ஷிர் இப்னு அப்துல் முன்திர்(ரலி)
13 .ஹாரிதா இப்னு ஸுராக்கா (ரலி)
14 .ராஃபிஃ இப்னுல் முஅல்லா (ரலி)
(இவர்கள் அன்சாரிகள்)
மொத்தம் 14 சஹாபா பெருமக்கள் தன் இன்னுயிரை தந்து, பத்ரு போரின் வரலாற்றிலும், அல்லாஹ்வின் இருப்பிடத்திலும் அழிவில்லா நிலை கொண்டார்கள்.
ஏறாத்தாழ 313 முஸ்லிம்களின் படை, இறைநிராகரிப்பு கூட்டமான குரைஷிக ளின் 1000 பேரை வெல்ல அல்லாஹ் உதவி புரிந்தான். குரைஷிகளின் தரப்பில் 70 பேர்கள் கொல்லப்பட்டனர், 70 பேர்கள் கைதியாக சிறைபிடிக்கப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களில் அபுஜஹல் உட்பட ,உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, அபுல்கம் இப்னு ஹிஷாம், உமையா இப்னு கலஃப் போன்ற பிரபல தலைவர்களும் அடக்கம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் தன்னுடைய உதவியை கொண்டு, இறை நம்பிக்கையாளர்களுக்கு வெற்றியையும், இறைநிராகரிப்பாளர்களுக்கு தோல்வியையும் தந்தான்.
இந்த பத்ரு போரின் மூலம் நமக்கு படிப்பிணைகள் உண்டு. அல்லாஹ்வை மட்டும் நம்பி, அவனிடம் மட்டும் உதவி தேடுவோருக்கு, அவனின் உதவி நிச்சயம் கிட்டும்.
பத்ருபோர் குறித்த சில காட்சிகளின் விபரம்---
1, நபி(ஸல்) நேரடியாக களத்தில் நின்று எதிரிகளை சந்தித்த போர்கள் மொத்தம் 19 ஆகும். (ஜைத் பின் அர்கம்(ரலி) புகாரி 3949) அதில் முதலாவது போர் பத்ருதான்.
2, பத்ரு போர் ஹிஜ்ரி 2, ரமளான் மாதத்தில் பிறை 17ல் நடைப் பெற்றது.
3, குர்ஆனின் 3:123முதல்127வரையுள்ள வசனங்கள், 8:7,9-13வரையுள்ள வசனங்கள் பத்ரு பற்றி பேசுகின்றன. (இப்னு மஸ்வூத்(ரலி) இப்னு அப்பாஸ்(ரலி) புகாரி 3952,3953,3954)
4, பத்ரு போரில் 60க்கும் கூடுதலான முஹாஜிர்(மக்காவாசி)களும், 240க்கும் கூடுதலான அன்சாரி(மதினாவாசி)களும் கலந்துக் கொண்டனர். (பரா இப்னு ஆஸிப்(ரலி) புகாரி 3956,3957,3958)
5, குர்ஆனின் 22:19,20,21 ஆகிய வசனங்கள் பத்ருபோரின் ஆரம்ப நிலை குறித்து இறக்கப்பட்டது. (அலி(ரலி) அபுதர்(ரலி) புகாரி 3965,3966,3967)
6, பத்ரு களத்தில் கலந்துக் கொள்ள போர்கவசங்களுடன் ஜிப்ரயீல்(அலை) இறங்கி வருவதை நபி(ஸல்) அறிவிக்கிறார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி) புகாரி 3995)
7, அபூஜஹல் என்ற பெரிய எதிரியை பத்ரில் கொன்றவர்கள் முஆத், முஅவ்வித் என்ற இரு சிறுவர்கள். (அனஸ்(ரலி) புகாரி 3962,3963,3988,4020)
8, 24 காபிர்களின் சடலங்கள் பத்ரு போர் நடந்த இடத்திலுள்ள கிணற்றில் தூக்கிப் போடப்பட்டன. 'நான் சொன்னதெல்லாம் உண்மை என்பதை இப்போது உணர்கிறீர்களா..' என்று நபி(ஸல்) கேட்டார்கள். (ஆய்ஷா(ரலி) அபூதல்ஹா(ரலி) இப்னுஉமர்(ரலி) புகாரி 3976,3980,4026)
9, பத்ரில் கொல்லப்பட்ட ஹாரிஸா பின் சுராகா(ரலி)க்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என நபி(ஸல்) நன்மாராயம் கூறுகிறார்கள். (அனஸ்(ரலி) புகாரி 3952)
10, ஒரு திருமணத்தின் போது பத்ரு போரில் கொல்லப்பட்டவர்களை புகழ்ந்து சிறுமிகள் தப்ஸ் அடித்து பாட்டுப்பாடுகிறார்கள். (பின்த் முஅவ்வித் - புகாரி 4001)
எல்லா புகழும் இறைவனுக்கே