இலங்கையில் இருந்து கொண்டு Paypal மூலம் நமது வங்கிக்கு பணத்தை பெற்றுக் கொள்ள முடியுமா? என்றால்.... தற்போதைக்கு நேரடியாக முடியாது
ஆனால் பணத்தை மட்டுமே அனுப்ப முடியும். ஆனால் payoneer என்ற தளம் மூலம் அந்த பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்..
அதில் உங்களுடைய உண்மையாக தகவல்களை கொடுக்கவும்.ஏன் என்றால் விரைவாக உங்களுடைய கணக்கை அவர்கள் ஏற்றுக் கொள்ள வசதியாக இருக்கும்.
உங்களுடைய கணக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட பின், அவர்களிடம் இருந்து ஒரு mail வரும்.
அதில் ஒரு சில கேள்வியையும் , உங்களுடை N.I.C ஐ கேட்டு இருப்பார்கள், உங்களுடை N.I.C ஐ Scan அல்லது Mobile மூலம் படம் பிடித்து , Upload செய்து கொள்ளுங்கள்.
இதை கொடுத்தால் மட்டுமே, நீங்கள் பணத்தை பெற்றுக் கொள்ள முடியும். இப்போது , உங்கள் பெயரில் ஒரு Master card இணை , வீட்டுக்கு அவர்கள் அனுப்பி இருப்பார்கள்.
இது எப்படியும் 2-3 வாரத்திற்குல் உங்களுக்கு கிடைத்துவிடும்.அந்த Card இல் 16 இலக்கம் மேலுக்கு எழுதப்பட்டிருக்கும்.அதில் இருதியில் முடியும் 4 இலக்கத்தை அவர்கள் Verification - ற்காக கேட்பார்கள்.
Card பெற்ற பின் அதை கொடுத்து Activate செய்து கொள்ளுங்கள். சரி, இப்போது payoneer கணக்கை வெற்றிகரமாக திறந்து Activate உம் செய்து விட்டோம்.
இதை எப்படி Paypal உடன் இணைப்பது என்று பார்ப்போம்.
Paypal இற்கு சென்று ஒரு கணக்கை Us நாட்டை கொடுத்து திறந்து கொள்ளுங்கள்.
(முகவரி பிழை என்றாலும் பரவாயில்லை) zip code போன்றவற்றை இணைத்தில் தேடி போட்டுக் கொள்ளுங்கள். அடுத்து Paypal இல் Login செய்து , Profile இல் Bank Account இனை Add செய்து கொள்ளுங்கள்.
அதற்கு தேவையான Routing , Account number ஆனாது உங்களுக்கு payoneer ஆரம்பத்தில் mail பன்னி இருக்கும் , உங்களுடைய inbox இல் சென்று பாருங்கள்.
அல்லது payoneer இல் login செய்து விட்டு, Receive Money >> US Payment Service சென்று பார்வையிடுங்கள். இப்போது உங்களுடைய payoneer கணக்கிற்கு Paypal ஆனாது.
உங்கள் வங்கி கணக்கை உறுதிப்படுத்த 2 விதமான தொகையை அனுப்பும், அது என்ன என்று பணம் பெற்றுக்கொண்ட பின், Paypal இல் Login செய்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
அவ்வளவு தான்...இப்போது வெற்றிகரமாக இலங்கையில் இருந்து கொண்டு Paypal மூலம் வரும் பணத்தை payoneer Master Card மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.