ஆபரேஷன் ஆம்லா... ஒத்திகையின் போது 100 பேர் சிக்கினர் !

தமிழக கடலோரப் பகுதிகளில் ஆபரேசன் ஆம்லா என்ற பெயரில் நடந்த 36 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை நேற்றிரவு 8 மணிக்கு நிறைவடைந்தது. 
ஆபரேஷன் ஆம்லா... ஒத்திகையின் போது 100 பேர் சிக்கினர் !
கடலோரப் பகுதிகளில் மாறு வேடத்தில் ஊடுருவ முயன்ற 100-க்கும் மேற் பட்டோர் போலீஸாரிடம் பிடி பட்டனர்.

இந்திய கடலோரப் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் விதமாக ஆண்டுக்கு 2 முறை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப் படுகிறது. 

இந்த ஒத்திகையின் போது இந்திய கடலோரப் படையினரால் பயிற்சி யளிக்கப் பட்ட அதிரடிப்படை வீரர்கள் சிலர் போலி வெடிகுண்டு, 

துப்பாக்கிகளுடன் தீவிரவாதிகள் போல கடலோரங்களில் அமைந்துள்ள முக்கிய இடங்களில் ஊடுருவ முயற்சிப்பர். 

அவர்களை கடலோர மாவட்டங்களில் உள்ள போலீஸாரும், கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாரும், மீனவர்கள் மற்றும் மற்ற துறை பணியா ளர்களின் ஒத்துழைப்புடன் கண்டுபிடிக்க வேண்டும். 
13 கடலோர மாவட்ட ங்களில்.. 
 
கடலோரப் பாதுகாப்பில் விழிப்புடன் இருக்கிறோமா என்பதை சரி பார்த்துக் கொள்ள இந்த ஒத்திகை உதவுகிறது.

1,076 கி.மீ. தொலைவு கொண்ட, 13 மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழக கடலோரங்களில் ஆபரேஷன் ஆம்லா என்ற 36 மணி நேரம் பாதுகாப்பு ஒத்திகை, நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தொடங்கியது. 

தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழும ஏடிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் நடை பெற்ற இந்த ஒத்திகையின் போது தீவிரவாதிகளைப் போல 

ஊடுருவ முயன்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் பிடிபட்டனர். நேற்று முன்தினம் 12 இடங்களில் ஊடுருவ முயன்ற 57 பேர் பிடிபட்டனர். 
 ஆபரேஷன் ஆம்லா... ஒத்திகையின் போது 100 பேர் சிக்கினர் !
சென்னை துறை முகத்தில் நேற்று நடந்த ஒத்திகையின் போது, சரக்கு கப்பலு க்குள் 12 பேர் புகுந்து கப்பலைக் கடத்த முயற்சித்தனர். 

அவர்களை கடலோர காவல் படையினரும், கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாரும் எச்சரித்தனர். 

அது பலனளிக்காத நிலையில், அதிரடிப்படை வீரர்களை கப்பலுக்குள் அனுப்பி ஊடுருவல் காரர்களுடன் சண்டையிட்டு சுற்றி வளைத்து பிடித்தனர். 

இதே போல ராமேசுவர த்தில் 26 பேரும், நாகப் பட்டினத்தில் 24 பேரும் தூத்துக் குடியில் 22 பேரும் ஊடுருவ முயன்று பிடி பட்டனர். 

கடந்த 36 மணி நேரத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நூற்று க்கும் மேற் பட்டோர் போலீ ஸாரிடம் பிடி பட்டனர். 

விரைவில் அறிக்கை 
ஒத்திகையின் போது எங்கெல்லாம் பாதுகாப்பு குறைபாடு இருந்தது என்ற தகவலை கடலோர காவல் படையினர் தமிழக போலீஸாருக்கு இன்னும் சில தினங்களில் அறிக்கையாக அனுப்பி வைப்பார்கள் என கூறப்படுகிறது. 

அதனடிப் படையில், குறிப்பிட்ட இடங்களில் கடலோர பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:
Privacy and cookie settings